50 சென்ட் நிலத்தில் சம்பங்கி பூ: ஏக்கருக்கு ரூ.2 லட்சம் லாபம்!

‘பிள்ளை போல் வெள்ளை நிறத்தில் சிரிக்கும் சம்பங்கிப் பூக்கள் தான் என்னை ஜெயிக்க வைக்கிறது,” என்கிறார், திண்டுக்கல் புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கலைசெல்வன்.

Courtesy: Dinamalar

இரண்டு ஏக்கர் நிலம் இருந்தாலும் 50 சென்ட் பரப்பளவில் நில மூடாக்கு முறையில் சம்பங்கி பயிரிட்டுள்ளார். 2 முதல் 3 ஆண்டுகளுக்கு உயிர் தரும் இப்பயிரின் மகத்துவம் குறித்து கலைசெல்வன் கூறியதாவது:

 • ஒரு ஏக்கருக்கு 150 கிலோ நில மூடாக்கு சீட் வேண்டும்.
 • இந்த சீட் கிலோ 230 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை செலவாகும். நீளப்பாய் போன்று இருக்கும் இதன் நடுவில் துளையிட்டு சம்பங்கி கிழங்கு நடவேண்டும்.
 • ஏக்கருக்கு 800 – 900 கிலோ கிழங்கு தேவைப்படும்.
 • சொட்டு நீர்ப்பாசனத்தின் மூலம் 16 அடி இடைவெளியில் ‘ஸ்பிரிங்ளர்’ முறையில் தண்ணீரை தெளிக்கலாம்.15 நாட்களில் முளை வந்து விடும்.
 • 65 முதல் 90 நாட்களில் பூ வர ஆரம்பிக்கும். ஏக்கருக்குஅதிகபட்சமாக 60 கிலோ பூக்கள் கிடைக்கும்.
 • சூழ்நிலையைப் பொறுத்து 3 நாட்களுக்கு ஒருமுறை நீர் பாய்ச்சினால் போதும்.
 • 5 மாதங்களுக்கு பிறகு பூக்கள் தினமும் கிடைக்கும். காலை வேளையில் மார்க்கெட்டிற்கு பூ அனுப்புவது நல்லது.
 • அதிகாலை 4:00 மணிக்கு பூ எடுக்கலாம். காலையில் பூக்கும் பூ வெள்ளையாக பளிச்சென்று இருக்கும்.
 • பூக்களை பறித்து தண்ணீரில் லேசாக நனைத்து கட்டி வைத்து திண்டுக்கல் மார்க்கெட்டிற்கு அனுப்புவேன்.
 • ஒரு நபர் ஒரு மணிநேரத்தில் 10 கிலோ பூக்கள் பறிக்கலாம். வைகாசி, ஆனியில் கிலோ 500 ரூபாய் வரை விலை கிடைக்கும்.
 • சீசன் இல்லாத நேரத்தில் கிலோ 20 ரூபாய் தான். ஆண்டுக்கு 52 முகூர்த்தங்கள் மூலம் லாபம் இருப்பதால், ஏக்கருக்கு சராசரியாக 2 லட்ச ரூபாய் லாபம் கிடைக்கும். என்றார்.

தொடர்புக்கு: 09787787432
எம்.எம்.ஜெயலெட்சுமி மதுரை.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “50 சென்ட் நிலத்தில் சம்பங்கி பூ: ஏக்கருக்கு ரூ.2 லட்சம் லாபம்!

 1. murugesan says:

  30 சென்டில் சம்பங்கி வைத்துள்ளேன் வாரம் ரூ.600 முதல் ரூ 800 வரை தான் வருகிறது Waste

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *