சாமை சாகுபடி

தர்மபுரி மாவட்டத்தில் மானாவாரி நிலங்களில் சாமை பயிர் செய்ய வேளாண் துறை அறிவுரை வழங்கியுள்ளது.

மானாவாரிக்கேற்ற மகத்தான பயிரான சாமை குறுகிய காலத்தில், குறைவான இடு பொருள் செல்வில் மிகுந்த லாபத்துக்கு ஏற்ற பயிராகும்.இப்பயிருக்கான உற்பத்தி தொழில் நுட்பங்களை கடைப்பிடித்து நடப்பு ஆடிப்பட்டத்தில் சாகுபடி செய்தால் அதிக லாபம் பெறலாம்.

 • விவசாயிகள் இப்பருவத்துக்கு ஏற்ற வறட்சியை தாங்கி வளர்ந்து உயர் விளைச்சலை தரக்கூடிய சாமை ரகங்களான கோ 3, கோ (சாமை) 4, பையூர் 2 மற்றும் கோ 1 ஆகியவற்றை சாகுபடி செய்ய வேண்டும்.
 • சாமை பொதுவாக கை விதைப்பு மூலம் செய்வதற்கு ஏக்கருக்கு ஐந்து கிலோ விதை போதுமானது.
 • பயிரின் வளர்ச்சி ஒரே சீராக இருக்க விதைப்பான் கொண்டு வரிசை விதைப்பு செய்தால்,ல அதிக பரப்பில் மண் ஈரம் காயும் முன்பே விதைக்கலாம்.
 • விதைகளை 25 செ.மீ., ஆழத்தில், வரிசைக்கு வரிசை 22,5 செ.மீ., இளைவெளியும், பயிருக்கு பயிர் 7.5 செ.மீ., இளைவெளியும் இருக்குமாறு விதைப்பு செய்ய வேண்டும்.
 • சாமை விதையின் அளவு மிக சிறியதாக இருப்பதால் அது முளைத்துவர ஐந்து முதல் ஏழு நாட்கள் ஆகும்.
 • விதைக்கும் முன்னர் சாமை விதைகளை ஒரு லிட்டர் தண்ணீரில் 100 மில்லி இளநீர் அதாவது 10 சதவீத இளநீர் கரைசலில் ஆறு மணி நேரம் ஊற வைத்து பின்னர் விதைப்பு செய்வதால், இளநீரில் உள்ள பொட்டாஷ் சத்தின் கராணமாக வறட்சியை தாங்கி வளர்ந்து நல்ல மகசூலை கொடுக்கும்.
 • விதைகளை அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போபாக்டீரியா உயிர் உர விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.
 • பொதுவாக விவசாயிகள் மானாவாரி பயிர்களுக்கு உரமிடுவதில்லை. இதனால், பயிர்களுக்கு போதிய சத்துக்கள் பற்றாக்குறையால் விளைச்சல் வெகுவாக பாதிபக்கப்படுகிறது.
 • பயிருக்கு மண் பரிசோதனைப்படி உரமிட வேண்டும். மண் பரிசோதனை செய்யாவிடில், பொதுப்பரிந்துரையான ஏக்கருக்கு ஐந்து டன் மக்கிய தொழு எரு 16 கிலோ தழைச்சத்து தரவல்ல 35 கிலோ யூரியா, எட்டு கிலோ மணிசத்து தரவல்ல 50 கிலோ சூப்டர் பாஸ்பேட் மற்றும் எட்டு கிலோ சாம்பல் சத்து தரவல்ல 14 கிலோ பெட்டாஷ் உரங்களை இட வேண்டும்.
 • சாமை பயிரை அதிக பூச்சி நோய்கள் தாக்குவதில்லை. ஒரு சில இடங்களில் குருத்து ஈ தாக்கி விளைச்சலை பாதிக்கும்.
 • இப்பூச்சிகளை கட்டுப்படுத்த விதைப்பை தள்ளி போடது பருமழை துவங்கிய உடன் விதைப்புடு செய்ய வேண்டும்.
 • சாமை கதிர்கள் நன்று முற்றி காய்ந்த பின் அறுவடை செய்து, தானியங்களை பிரித்தெடுத்து சுத்தம் செய்து காய வைத்து சேமிக்க வேண்டும்.
 • ஒரு ஏக்கருக்கு 600 முதல் 800 கிலோ தானிய விளைச்சல் கிடைக்கும்.
 • சாமையில் உய்ய சத்துக்கள் பற்றிய மக்களிடையே நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதாலும், உணவு பொருட்கள் மற்றும் பிஸ்கட் போன்ற பொருட்கள் தயார் செய்ய மூலப்பொருளாக விளங்குவதால் சாமையின் தேவை அதிகரித்துள்ளது.வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இவ்வாறு உழவர் பயிற்சி நிலைய வேளாண் துணை இயக்குனர் மேகநாதன் கூறியுள்ளார்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *