சிறு தானியத்தில் உணவு பொருள் தயாரிப்பு பயிற்சி

சந்தியூர் வேளாண் அறிவியல் நிலையத்தில், கம்பு,சோளம், ராகி உள்ளிட்ட சிறுதானியத்தில் இருந்து, லட்டு, தோசை மாவு, பிஸ்கெட் உள்ளிட்ட பொருட்கள் தயாரிப்பது குறித்த பயிற்சி, வரும், 2015 மே 28ம் தேதி நடக்கிறது.
சந்தியூர் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீராம் கூறியதாவது:
சிறுதானியத்தில், அதிக வைட்டமின், தாது உப்பு உள்ளது. உடலுக்கு தேவையான கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. கம்பு, சோளம், ராகி, சாமை, பணி விரகு உள்ளிட்ட சிறுதானியங்களில் இருந்து, மதிப்பு கூட்டும் பொருளாக, லட்டு, பிஸ்கெட், தோசை மாவு, ராகி மால்ட், முறுக்கு, குக்கீஸ் உள்ளிட்ட உணவு பொருட்கள் தயாரிப்பது குறித்து, வரும், 2015 மே 28ம் தேதி , ஒரு நாள் பயிற்சி வழங்கப்படும்.

பயிற்சி கட்டணமாக, 300 ரூபாய் செலுத்த வேண்டும்.

சிறு தானியங்களில் தயாரிக்கப்படும் உணவு பொருட்களுக்கு, பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. விவசாயிகள், சுய உதவி குழு மகளிர், தொழில் முனைவோர், 0427 – 2422550 எண்ணில் தொடர்பு கொண்டு, தங்களது பெயரை முன் பதிவு செய்ய கொள்ள வேண்டும்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *