சிறுதானிய உணவு மூலமாக குழந்தைகளின் சத்துக் குறைபாட்டைப் போக்க முடியும் என, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் கு.ராமசாமி தெரிவித்தார்.
கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் தேசிய சிறுதானிய உற்பத்தி பெருக்கத்திற்கான கலந்தாலோசனை கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.இதில், வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் கு.ராமசாமி பேசியது:
- வளர்ச்சி என்ற பெயரில் நம் பாரம்பரிய அறிவையும், உணவுப் பழக்கத்தையும் தொலைத்து விட்டோம்.
- காலதாமதமாக அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து இழந்தவற்றை மீட்க போராடிக் கொண்டிருக்கிறோம்.
- சிறு தானியங்களில் உடலுக்குத் தேவையான தாதுப் பொருட்கள், வைட்டமின்கள், நார்ச்சத்து அதிகம் உள்ளதால் நலமான வாழ்வுக்கு பெரிதும் உதவும். அதிகளவு உணவு உற்பத்தியைவிட சத்து மிகுந்த சிறுதானியங்களை உற்பத்தி செய்வதே நாம் நாட்டில் நிலவும் குழந்தைகளின் சத்துக் குறைவு மற்றும் வாழ்வியல் நோய்களைக் கட்டுப்படுத்த சிறந்த வழியாகும் என்றார்.
மதுரை தானம் அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் எம்.பி.வாசிமலை பேசியது:
- சிறு தானிய நுகர்வு, சாகுபடி, சிறுதானிய ரகங்களைப் பாதுகாத்தல் மற்றும் அதன் வியாபாரத்தைப் பெருக்குதல் மூலமாகத் தான் சிறுதானிய உற்பத்தியில் நாம் விரும்பும் மறுமலர்ச்சியைக் காண முடியும்.
- சிறுதானியம் தொடர்பான செயல்களில் ஈடுபட்டுள்ள விவசாயி முதல் வியாபாரிகள், ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் இணைந்து செயல்பட்டால்தான் இது சாத்தியமாகும் என்றார்.
கனடா மின்னசோட்டா பல்கலைக்கழகப் பேராசிரியர் கிரித் பட்டேல் பேசியது:
- சிறுதானிய ஆராய்ச்சித் திட்டத்தில் கனடாவைச் சேர்ந்த ஐந்து பல்கலைக்கழகங்களும் ஈடுபட்டுள்ளன.
- சிறுதானிய உணவின் மகத்துவத்தை உணர்ந்து, தமிழகத்தில் உள்ள அனைவரும் மாதம் ஒரு கிலோ சிறுதானிய உணவை உட்கொள்ள நினைத்தால் இன்றைய சூழலில் அது முடியுமா என்றால் முடியாது.
- ஒரு நபர் மாதத்திற்கு வெறும் 150 கிராம் உண்ணும் அளவுக்குத் தான் உற்பத்தி இருக்கிறது. எனவே, சிறுதானிய உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்றார்.
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
Thank’s Your Information……