சிறு தானிய உணவு தயாரிப்புப் பயிற்சி

சிறு தானிய உணவுகள் தயாரிக்கும் பயிற்சியானது 2015 ஜூலை 13-இல் தேசிய குறு, சிறு, நடுத்தரத் தொழில் மையத்தில் தொடங்க உள்ளது.  இதுகுறித்து தேசிய குறு, சிறு, நடுத்தரத் தொழில் வளர்ச்சி நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

  • சென்னை, கிண்டியில் உள்ள இந்திய அரசு நிறுவனமான குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் வளர்ச்சி நிலையம், தொழில் முனைவோருக்கான பல்வேறு தொழில்திறன் பயிற்சிகளை நடத்தி வருகிறது.
    இதன்படி, சிறுதானிய உணவுப்பொருள் தயாரிக்கும் பயிற்சியானது 2015 ஜூலை 13 முதல் ஜூலை 17 வரை நடத்தப்பட உள்ளது.
  •  சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பொருள்களான பேப்பர் கேரி பேக்ஸ், நான்ஓவன் துணி பைகள், மருத்துவமனைக்குத் தேவையான மாஸ்க், தொப்பி, அலுமினியம் ஃபாயில் பாக்ஸ், டிஸ்யூ பேப்பர், வாழைநார் பொருள்கள், தென்னநார் பொருள்கள், பாக்குமட்டைத் தட்டுகள் உள்ளிட்டவற்றைத் தயாரிக்க பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
  •  மேலும், பாரம்பரிய சிறுதானியங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் தினை லட்டு, தினை இனிப்பு பனியாரம், தினை தோசை மிக்ஸ், வரகு புளியோதரை, வரகு பிரியாணி மிக்ஸ், சாமை முறுக்கு மிக்ஸ், சாமை உப்புமா மிக்ஸ், குதிரைவாலி பொங்கல் மிக்ஸ், சிறு தானிய சப்பாத்தி மிக்ஸ், சத்துமாவு மிக்ஸ், கம்பு இட்லி- தோசை மிக்ஸ், சோள அடை உள்ளிட்ட சிறு தானிய உணவுப் பொருள்களுக்கு உள் நாட்டிலும், வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு உள்ளது.
    சிறுதானிய உணவுச் சந்தை குறித்த தகவல்களைக் கொண்டும், வர்த்த ரீதியான வல்லுநர்களைக் கொண்டும் இப்பயிற்சிகள் நடத்தப் பட உள்ளன.
  • தொழில் தொடங்குவதற்கான ஆலோசனைகள், திட்ட அறிக்கை தயார் செய்தல், வங்கிக் கடன் குறித்த முறைகள், தரக்கட்டுபாடு விவரங்கள், இயந்திரங்கள், மூலப்பொருள்கள், விற்பனை வாய்ப்பு விவரங்களும் வழங்கப்பட உள்ளன. இதற்கு கல்வித்தகுதி தடையில்லை.
  • ஆகவே, 18 வயது நிரம்பிய இருபாலரும் சேரலாம். எஸ்.சி, எஸ்.டி, மாற்றுத் திறனாளிகளுக்கு 50 சதவீத கட்டணச் சலுகை உண்டு. பயிற்சியின் இறுதியில் இந்திய அரசு சான்றிதழ் வழங்கப்படும்.

விருப்பமுள்ளவர்கள், சென்னை கிண்டி, ஜிஎஸ்டி சாலையிலுள்ள தேசிய குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் வளர்ச்சி நிலையத்தை 09940318891 தொடர்புகொண்டு பயன் பெறலாம்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *