தினை சாகுபடி டிப்ஸ்

வருமானம் அதிகரிக்க தினை பயிரிடலாம் என வேளாண்துறையினர் ஆலோசனை வழங்கி உள்ளனர்.இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:

  • ‘‘தினை பயிரிட கோ-6, கோ(தி) 7 ஆகியவை ஏற்ற ரகங்கள் ஆகும். ஆடி மற்றும் புரட்டாசி பட்டம் ஏற்ற பருவங்கள். செம்மண் மற்றும் இருமண் கலந்த நிலங்கள் உகந்ததாகும். பயிர் அறுவடைக்கு பின்பு நிலத்தை சட்டிக் கலப்பை கொண்டு ஆழமாக உழவு செய்ய வேண்டும்.
  • வரிசை விதைப்பாக இருந்தால் 1 ஹெக்டேருக்கு 10 கிலோ விதைக்க வேண்டும். தூவுவதாக இருந்தால் 1 ஹெக்டேருக்கு 12.5 கிலோ விதைக்க வேண்டும். 22.5 சென்டிமீட்டருக்கு 7.5 சென்டிமீட்டர் இடைவெளியில் விதைக்க வேண்டும்.
  • 1 ஹெக்டேருக்கு தேவையான விதையளவிற்கு 600 அசோபாஸை அரிசிக் கஞ்சியுடன் கலந்து நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும்.
  • நிலத்தில் இடுவதாக இருந்தால் 1 ஹெக்டேருக்கு 2 கிலோ அசோபாஸை மணல் மற்றும் 25 கிலோ தொழுஉரம் கலந்து தூவ வேண்டும்.
  • ஒரு ஹெக்டேர் நிலத்தில் அடியுரமாக 12.5 டன் மக்கிய தொழுஉரத்தை கடைசி உழவின்போது பரப்பி பிறகு நிலத்தை உழ வேண்டும். 1 ஹெக்டேருக்கு முறையே 44:22 கிலோ தழை மற்றும் சாம்பல் சத்துக்களை இட வேண்டும்.
  • இந்த பயிரை பொதுவாக பூச்சிகள் மற்றும் நோய்கள் தாக்குவதில்லை. அதனால் பயிர் பாதுகாப்பு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
  • கதிர்கள் நன்கு காய்ந்து, இலைகள் பழுத்தவுடன் அறுவடை செய்து, களத்தில் காயவைத்து அடித்து தானியங்களைப் பிரித்து சுத்தம் செய்ய வேண்டும். இதுதொடர்பான கூடுதல் விபரங்களுக்கு விவசாயிகள் அந்தந்தப் பகுதி வேளாண் அலுவலர்களையோ, வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தையோ தொடர்பு கொள்ளலாம்’’

நன்றி: தினகரன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *