சூரியகாந்தி உற்பத்தியை அதிகரிக்க யோசனை

சூரியகாந்தி உற்பத்தியை அதிகரிக்க நவீன தொழில்நுட்ப முறைகள:

 •   60- 90 நாள்கள் வயதுடைய சூரியகாந்தி வறட்சியைத் தாங்கி வளரும்.
 •  பொதுவாக சூரியகாந்தியில் மகசூல் குறைவுக்கு பிரதான காரணம் மகரந்தச் சேர்க்கை உண்டாகாமல் இருப்பதுதான்.
 • எனவே, புதிய உயர் விளைச்சல் தொழில்நுட்பங்களைக் கடைப்பிடித்து, மகரந்தச் சேர்க்கையை அதிகரித்து அதிக மகசூல் பெறலாம்.
 • சூரிய வெளிச்சம் இருக்கும் போது காலை 6.30- 7.30 மணிக்கு தொடங்கி 9.30- 11 மணிவரை தொடர்ந்து மகரந்தத் தூள் வெளி வரும்.
 • குறைந்த வயதுடைய உயர் ரகங்களைத் தேர்வு செய்து தகுந்த பருவத்தில் விதைக்க வேண்டும்.
 • அதாவது, பூ பூக்கும் காலம் மழை இல்லாத காலமாக இருக்க வேண்டும்.
 • சூரியகாந்தி பயிரிடும் இடத்தில் ஏக்கருக்கு 2 தேன் கூடுகளை அமைத்து, தேனீக்கள் மூலம் அயல் மகரந்த சேர்க்கையை அதிகப்படுத்திட வேண்டும்.
 •  கையினால் மகரந்தச் சேர்க்கை என்ற முறையில் செய்து மகரந்தச் சேர்க்கையை அதிகரிக்கலாம்.
 • வேலை ஆள்களின் கைகளில் மெல்லிய சுத்தமான வெள்ளைத் துணியைச் சுற்றி, பூவின் மேல்பாகத்தை மெதுவாக ஒற்றிவிடச் செய்ய வேண்டும்.
 •  செடிகளில் பூ பூத்தபின் 2 செடிகளின் பூத்தட்டுகளைப் பற்றி, முகத்தோடு முகம் ஒட்டுவது போல 2 பூத்தட்டுகளையும் பற்றி மெதுவாக ஒன்றுடன் ஒன்று படுமாறு இணைக்க வேண்டும்.
 • போராக்ஸ் என்ற நுண்ணூட்டத்தை பூக்களில் தெளிப்பதால் விதை உற்பத்தி அதிகரிக்கலாம்.
 • இவ்வாறு  சூரியகாந்தி பயிர் செய்துள்ள விவசாயிகள் விதை உற்பத்தியை அதிகரிக்கும் தொழில்நுட்பங்களைக் கடைபிடித்து, அதிக மகசூல் பெற்றுப் பயனடையலாம்.

இவ்வாறு பெரம்பலூர் வட்டார வேளாண் உதவி இயக்குநர் எம். செந்தமிழ்ச்செல்வன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளார.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *