அந்த ஐந்து நிமிட சுகத்திற்காக!

 

மனிதர்களுடைய பேச்சில் ஒரு பெரிய தாக்குதலை “மிருகத்தனமான தாக்குதல்” என்று கூறி விடுவோம்.

ஆனால் எந்த மிருகமும் தன்னுடைய உணவை தவிர எந்த காரணத்திற்கு தன இரையை தாக்குவது இல்லை. நம்மை போன்று காரணம் இல்லாமல் கொலை, பயங்கரவாதம், அநியாயங்கள் எந்த மிருகமும் செய்யாது.

ஆனால் நாம் அவற்றை இப்படி சொல்வோம்.

நம்முடைய அந்த ஐந்து நிமிட சுகத்திற்காக எத்தனை மிருகங்கள் அழிக்க படுகின்றன தெரியுமா?

சீன நாட்டில் கடந்த 30 ஆண்டுகளில் ஏற்பட்ட பொருளாதார முன்னேற்றம் பலரிடம் கையில் காசு வந்துள்ளது. அவர்களின் நாடு மருத்துவத்தில் அந்த சுகத்தை பெருக்க அந்த காலத்தில் அதிகமாக உலவி வந்த மிருகங்களின் பாகங்களை பயன் படுத்தினர். இப்போது சீனாவில் அவை எல்லாம் மறைந்து விட்டன.

இப்போது உலகம் முழுவதும் மிருகங்கள் கொலை செய்ய பட்டு சீனாவிற்கு கடத்தி செல்ல படுகின்றன. இந்தியாவிலும் இப்படி சீட்டு குருவி லேகியம் போன்றவை உள்ளன

நம் நாட்டில் உள்ள (sorry , இருந்த) எறும்பு தின்னி ஒன்றாகும். 30 ஆண்டுகள் முன்பு நான் கிண்டி பொறியியல் கல்லூரியில் படித்த பொது இதை ஹாஸ்டல் அருகே பார்த்து உள்ளேன். அது தான் கடைசியாக பார்த்தது.

பாவமான எந்த வம்புக்கு போகாத ஒரு மிருகம். அழகாக மெதுவாக நடந்து செல்லும். அருகில் உள்ள கிண்டி நேஷனல் பார்க் இல் இருந்து எங்கள் கல்லூரிக்கு வந்து விட்டது. திருப்பி போய் அங்கேயே விட்டார்கள்.

இப்போது இவை எங்குமே பார்க்க கிடைப்பதில்லை. காரணம் சீன மருத்துவம் தன். ஆனால், எந்தவித விலங்குகளையும்விட எறும்புத்தின்னிதான் இந்த வர்த்தகத்தால் பெரிதும் பாதிக்கப்படுகிறது.

வித்தியாசமான தோற்றமுடைய இந்த எறும்புத்தின்னி, அதனுடைய இறைச்சி மற்றும் செதில்களுக்காக சில நாடுகளில் அதிக விலை கொடுத்து வாங்கப்படுகிறது.

உலக நாடுகளில் அதிகமாக கடத்தப்படும் பாலூட்டி இந்த எறும்புத்தின்னி என நம்பப்படுகிறது.

ஆண்டுதோறும் சுமார் ஒரு லட்சம் எறும்புத்தின்னிகள் காடுகளில் இருந்து பிடிக்கப்பட்டு, வியட்நாமுக்கும், சீனாவுக்கும் கடத்தப்படுகின்றன.

அந்த ஐந்து நிமிடத்திற்கு தன உயிரையே பறி கொடுத்து அழிந்து வரும் அநியாயம் இது!

 

 

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *