நம்மை போலவே சீனாவிலும் அதிகமான மக்கள் தொகை. அந்த அரசாங்கமும் மக்களுக்கு உணவு பிரச்சனை வராமல் இருக்க அதிக மகசூல் பெற வேண்டும் என்று விவசாயிகளை கட்டாய படுத்தினர்.
அதிகம் Nitrogen உள்ள உரங்களை அதிகம் பயன் படுத்த கட்டாய படுத்த பட்டனர். 1980 முதல் 2010 வரை மண்ணின் தன்மை இந்த அதிக உர பயன் பாட்டால் மிகவும் கெட்டு போய் விட்டது என்று ஒரு ஆராய்ச்சி கூறுகிறது.
அமிலத்தன்மை அளவிடும் pH factor என்பது நல்ல மண்ணில் 6 முதல் 8 வரை இருக்க வேண்டும். ஆனால் சீனாவில் பல இடங்களில் அது 3-4 வரை குறைந்து உள்ளது – இது மண் அமில தன்மை பெற்று வருகிறது என்பதை காட்டுகிறது.
தேவைக்கு அதிகமாக இப்படி உரத்தை பயன் படுத்தினால், மண்ணிற்குதான் கெடுதல். இதனால், நீண்ட கால பயன் பாட்டால் மண்ணில் எதுவும் வளராமல் போகும் வாய்ப்பு அதிகம்.
நன்றி: ஈகோலோகிஸ்ட்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்