ஓரங் ஒட்டன் குரங்கும் பாம் எண்ணையும்!

நல்லது செய்ய போய் மிக பெரிய தீங்குகள் வருவது பற்றி கேள்வி பட்டுள்ளோம்.
நம் கண் முன்னால் இப்படி ஒரு தீங்கு நடந்து கொண்டு இருக்கிறது. அதில் நாமும் ஒரு பங்கு என்பதை அறியும் போது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது.

இந்த கதை சில ஆண்டுகள் முன்பு ஐரோப்பாவில் ஆரம்பிக்கிறது.பூமி சூடுபடுவதை குறைக்க ஐரோப்பா டீசல் மற்றும் பெட்ரோலில் தாவர எண்ணெய் கலக்க ஆணை இடுகிறது. குளிர் தேசமான ஐரோப்பாவில் தாவர எண்ணெய் தாவரங்கள் வளர்வது கஷ்டம். இதனால் இந்தோனேஷியா போன்ற நாடுகளில் பாம் ஆயில் கொடுக்கும் பனை மரங்களை வளர்க்க ஆரம்பிக்கிறார்கள்

 

சில வருடங்களில், பாம் ஆயில் பெரிய பிசினஸ் ஆக வளர்கிறது. ஐரோப்பாவில் டீசலோடு கலப்பது மட்டும் இல்லாமல் இந்தியா போன்ற நாடுகளுக்கு சமையல் எண்ணெய் ஏற்றுமதி ஆகிறது.

இப்போது சக்கை போடு போடும் இந்த தொழில் சிறிது சிறிதாக உலகின் கடைசி மழை காடுகளை நோக்கி சென்றுள்ளது.இந்த மழை காடுகள் உள்ள சுமத்திரா ஜாவா போன்ற தீவுகளில் உள்ள லட்சக்கணக்கான வருடம் பழமை உள்ள காடுகள் அழித்து அங்கு பனை விளைவிக்க படுகிறது.

இந்த காடுகளில் வசித்து வரும் ஓரங் ஒட்டன் என்ற மனிதர்களை போன்ற புத்திசாலித்தனம் கொண்ட பெரிய குரங்குகள் அழிக்க படுகின்றன. ஒரு ஆண்டுக்கு 6000 குரங்குகள் இப்படி அழித்து கொல்ல படுக்ன்றன.

இன்னும் சில ஆண்டுகளில் இவை அழிந்து விடும் அபாயமும், உலகின் கடைசியில் மிச்சமுள்ள மழை காடுகள் அழிந்தால் பருவ மழைகள் மாறும் அபாயமும் அதிகரித்து உள்ளது.

பல லடசம் வருடங்கள் இயற்கையை ஒரு தலைமுறையில் அழிக்க மனிதனால் தான் முடியும். இப்போதுதான் ஐரோப்பா இந்த பயங்கரத்துக்கு விழித்து ஒரு நாடு பாம் எண்ணெய் இறக்குமதியை நிறுத்தி உள்ளது.

நாம் என்ன செய்ய முடியும் என்கிறீர்களா? இந்தியாவில் கடையில் கிடைக்கும் எல்லா பாம் எண்ணையும் மலேஷியா அல்லது இந்தோனேஷியா வில் இருந்து இறக்குமதி செய்ய பட்டது தான்.

நம் ஊரில் விளையும் கடலை அல்லது நல்லெண்ணைக்கு மாறுவோமே?

மேலும் அறிய:


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “ஓரங் ஒட்டன் குரங்கும் பாம் எண்ணையும்!

  1. ராஜாசிங் says:

    சார் சரியாக சொல்லி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது ஆகவே மாறுவோம் மாற்றிக்கொள்வோம் நம்மையும் நண்பர்களையும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *