காணாமல் போன விலங்குகள்!

ஆதி மனிதன் முதலில் ஆப்ரிக்காவில் உள்ள எத்தியோப்பியாவில் தான் முதலில் வந்தான்.
அங்கிருந்து தான் ஆதி மனிதனின் அடையாள சுவடுகள் (Fossils)கிடைத்துள்ளன அங்கிருந்து அவன் கால போக்கில் உலகம் முழுவதும் பரவினான்

இப்போது புலிட்ஸ்ர் பரிசு பெற்ற பத்திரிகையாளர் பால் சாலோபக் ஆப்பிரிக்காவில் இருந்து ஆதி மனிதன் பரவிய வழியில் அவன் எப்படி நடந்து சென்றானோ அதே மாதிரி பயணித்து கொண்டு இருக்கிறார். என்ற இந்த நடை 2013இல் தொடங்கியது. 2023இல் முடியும்

காடு மலை எல்லாம் நடந்தே சென்று கொண்டு இருக்கிறார்.சென்ற வாரம் சென்னை வந்து இருந்தார்.
இது வரை 18000கிலோ மீட்டர் நடந்து உள்ளார். இன்னும் 20000 கிலோ மீட்டர் நடக்க வேண்டும்.தென் அமெரிக்காவில் முடிப்பதற்கு.

யாரும் காணாத இவரின் அனுபவங்கள், புகைப்படங்கள் விடியோக்கள் மூலம் இவர் இன்டர்நெட்டில் பதிவு செய்து வருகிறார்.  இவரை பற்றி இங்கே நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்

சரி இவரை பற்றி ஏன் இவ்வ்ளவு கதை என்கிறீர்களா? இவரின் 18000 கிலோமீட்டர் நடையின் மிகவும் ஷாக் கொடுக்கும் கண்டுபிடிப்பு என்ன தெரியுமா?

இவர் நடந்த 18000கிலோமீட்டரில் எங்குமே காட்டு விலங்குகளை காணவில்லை என்கிறார் இவர். மனிதன் இந்த உலகத்தை ஒரு பிடி பிடித்து விட்டான் என்கிறார் இவர்

உண்மை தான்.

நான் சிறுவனாக இருந்த போது புதுச்சேரியில் படித்தேன்.அங்கே கடற்கரையில் எவ்ளவோ விதமான நண்டுகளை பார்த்து உள்ளேன். 2ஆண்டு முன்பு கடல் கரையில் ஒரு நண்டு கூட காணோம். தஞ்சை மாவட்டத்தில் கால்வாய் அருகே உள்ள உள்ள தென்னை மரங்களில் நீர் நாயை பார்த்து உள்ளேன். பண்ருட்டி அருகே நரிகள் , ராமேஸ்வரத்தில் பெரிய ஆமைகள் என என்னுடைய சிறு வயது நினைவுகள். புதுச்சேரிலயில் எங்கள் வீட்டில் நிறைய தேள் வரும்.. இரவு பெரிய ஆந்தைகள் மரத்தின் மீது இருக்கும்.இப்போது தமிழ்நாட்டில் இவற்றை எல்லாம் ஒரு தலைமுறையில் காணாக போவிட்டன.

இல்லை

மனிதன் இவற்றின் வாழ்வாதாரங்களை சிறிது சிறிதாக அழித்து வருகிறான்

அடுத்த தலைமுறைக்கு கரப்பு கொசு எலி மாடு ஆடு கோழி தவிர வேறு மிருகங்களை பார்ப்பானா?

இன்று உலக மிருகங்கள் தினம். 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *