காலநிலை மாற்றம் (Climate change) மூலம் உலகம் முழுவதும் கோடி கணக்கானவர் சரியான நீர், காற்று இல்லாமல் வேறு இடங்களுக்கு அகதிகளாக (Environmental refugees) செல்வர் என்று சொல்லப்படுகிறது. இது இன்னும் 70 ஆண்டுகளில் நடக்கும் என்று சொல்லப்பட்டாலும் இப்போதே நம் நாட்டிலேயே இதற்க்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்து விட்டன.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுக்காவில் உள்ள மீனாட்சிபுரம் ஒரு காலத்தில் (2011இல்) 1135 பேர் வாழ்ந்து வந்தனர். சிறிது சிறிதாக நீர் கஷ்டம் அதிகரிக்க ஒவ்வொருவராக ஊரை விட்டு வெளியேறினார்.கடைசியாக 50 குடும்பங்களும் வெளியேறின.
இப்போது இந்த கிராமத்தில் ஒரே ஒருவர் – கந்தசாமி என்ற 71 வயது முதியவர் மற்றும் தனியாக வாழ்கிறார்.
தன்னுடைய கடைசி நாட்களை அவரின் மனைவியுடன் அவர் வசித்த ஊரிலே இருக்க விருப்பம் என்கிறார்.
ஒரு காலத்தில் அவர் 5 ஏக்கர் நிலத்தில் கம்பு விளைவித்து வந்தார். சிறிது சிறிதாக வறட்சி அதிகம் ஆனதில் எல்லாம் நின்று போனது
“நான் யாருக்கும் ஒரு பைசா கடன் வைக்க வில்லை. என் குழந்தைகள் திருமணம் ஆகி செட்டில் ஆகி விட்டனர். அவர்கள் தூத்துக்குடியில் இருக்கின்றனர்.”
சரி அவர் எப்படி தனியாக வாழ்கிறார்? அவர் பையன் மாதம் 1500 கொடுத்து செல்கிறார். ஒரு நாள் 30 ரூபாய் பீடியிலும்
மற்றவை மளிகையில் செலவழிக்கிறார். அப்போது தான் ராஜா மற்றும் ராணி வந்து இவர் வாழ்க்கையில் சேர்ந்தனர். இரண்டும் நாய்கள். இவற்றுக்கும் சேர்த்து சமைக்கிறார். அவர் பையன் கொடுத்துள்ள டீவீ பார்த்து நேரம் கழிக்கிறார்,
“இன்று இல்லாவிட்டாலும் என் ஊர் ஒரு நாள் நல்ல மழை பெய்து நன்றாக ஆகும். திரும்பி எல்லாரும் வருவர்” என்கிறார்.
ஆம், பாழடைந்த ஊரில் ஒரே ஒரு வீட்டில் நம்பிக்கையோடும் நாய்களோடும் காலநிலை மாற்றம் செய்த மாற்றத்தால் தனியாக இருக்கிறார்! நிலைமை மாறாவிட்டால், 10 ஆண்டுகளில் இப்படி பல ஊர்களில் பார்க்க கூடும்
நன்றி: Rural India Online
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
ஒரு பெரிய விஷயம் தான் இந்த நிலையில் உள்ள இன்னும் நிறைய ஊர் கிராமம் மற்றும் குக்கிராமம் உள்ளது இதை தொடர்ந்து வருங்காலம் தற்போது இருக்கும் நிலைக்கு உண்மை நிலை வரும்போல் தெரிகிறது சிறந்த கட்டுரை எழுதிய அவர்களின் செய்கை போற்றுதலுக்கு உரியது என்பது உண்மை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்