குழந்தைகளுக்கு பயன் படுத்தும் டயப்பரினால் வரும் பிரச்னை

நாம் குழந்தைகளாக இருந்த பொது டயபர் என்ற ஒன்றே இல்லை. ஏதோ ஒரு ஜட்டி டிரௌசர் போட்டுகொண்டு இருப்போம். இப்போது என்ற பெயரில் எல்லாரும் இந்த டயப்பர் பயன் படுத்த ஆரம்பித்து விட்டோம்,

எப்போதாவது, எப்படி டயபர் இவ்வளவு சிறுநீரை உறுஞ்சி கொள்கிறது என்று யோசித்தோமா? அப்படி யோசித்து விடை தெரியாமல் கூகுளை செய்து நான் கண்டு பிடித்தது ஒரு ரசாயனம் – இதன் பெயர் சோடியம் பாலி ஆகிறலேட் Sodium Polyacralate  . நவீன காலத்தின் பல ஒண்டெர் ரசாயனங்களின் இதுவும் ஒன்று. இது சூப்பர் பாலிமர். அதன் எடையை விட 1000 மடங்கு நீரை உட்கொள்ளும் ரசாயனம்!

சரி நல்லது தானே என்கிறீர்களா? ஒரே ஒரு பிரச்னைதான்..

இந்த சோடியம் பாலி ஆகிறலேட் மக்க 500 முதல் 600 ஆண்டு ஆகும். அது வரை அதில் இருந்து கசியும் ரசாயனங்கள் நிலத்தடி நீரில் சேரும்.. இவற்றை எப்படி டிஸ்போஸ் செய்வது என்பது பெரிய பிரச்னை..

இதே ரசாயனம் தான் மாத விடாய் காலத்தில் பயன் படுத்த படும் சானிடரி நாப்கினிலும் பயன் படுத்த படுகிறது..

சரி இதற்கு என்ன மாற்று.. விரைவில் பார்ப்போம்..


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *