மனிதனின் குப்பை பழக்கங்கள் எப்படி எல்லாம் உலகத்தை கெடுத்து வருகின்றன என்று முன்பு பார்த்தோம்.
இன்று நாளிதழில், டெல்லி அருகே உள்ள குர்காவ்ன் ஊரில் வெளி நாட்டில் இருந்து வந்துள்ள கொக்கு ஒன்று ஏரியில் உள்ள பிளாஸ்டிக் பாட்டிலின் மூடி அதன் வாயில் மாட்டி கொண்டுவிட்டது. இப்போது அதானால் மூடியை வெளியின் கொண்டு வர முடியாமல் உணவு இல்லாமல் இளைத்து சாகும் நிலையில் உள்ளது. இதனை போட்டோ எடுத்த இடத்தில் இருந்து பறந்து போய்விட்டதால் இதை மிருக ஆர்வலர்கள் தேடி கொண்டு இருக்கிறார்கள் – காப்பாற்ற முடியுமா என்று பார்க்க.
நாம் இந்த உலகில் வாழும் மிஞ்சி போனால் இருக்கும் 70 வருடத்தில் எத்தனை மக்காத குப்பை உருவாக்கி வைத்து செல்கிறோம்?
இன்றையில் இருந்து பிளாஸ்டிக் பாட்டிலில் விற்கும் கோக் பெப்சி நீர் வாங்காமல் தவிர்ப்போம். நீரை நம் பாட்டிலில் எடுத்து செல்வோம்.
நன்றி:DailyO
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்