மரபணு வாய்பூட்டு சட்டம் முன்னேறுகிறது ..

மரபணு வாய்பூட்டு சட்டத்தை பற்றி நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம்.
இந்த மழை கால பாராளுமன்ற தொடரில் இந்த மசோதாவை அவசர அவசரமாக கொண்டு வர முயற்சித்தார்கள்.

அண்ணா ஹஜாரே போராட்டத்தால் பாராளுமன்றம் முடக்க பட்டது.இப்போது இந்த மசோதா வர அதிக வாய்ப்பு உள்ளது.அவசர அவசரமாக இந்த UPA அரசாங்கம் இந்த மசோதாவை கொண்டு வர துடிக்கிறது.  Monsanto போன்ற நிறுவனங்கள் பொறுமையோடு காத்து கொண்டு இருக்கின்றன.
இந்த மசோதாவின் முக்கிய சாரம்சங்கள்:

  • மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் பாதுகாப்பு பற்றி விஞானிகள் அல்லாதோர் குறை சொன்னால், ஆறு மாதம் முதல் ஒரு வருடம் சிறை
  • மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு, ஒற்றை சாளர அங்கீகாரம் (Single Window clearence). இந்த ஆணையத்தில், மொத்தம் 5 பேர். அவர்கள் சரி என்றால், என்ன மாதிரியான பயிர்களுக்கும் எளிதான அங்கீகாரம். அனான பட்ட அமெரிக்க நாட்டிலேயே, இப்படி GM பயிர்களுக்கு அங்கீகாரம் கிடைக்காது!
  • மரபணு மாற்றப்பட்டபயிர்களின் பாதுகாப்பு தகவல்கள், சம்பந்த பட்ட நிறுவனத்தின், “வணிக ரகசியம்” (Trade secret) என்று கருத படும்!ஒரு பயிர் எப்படி சோதனை செய்ய பட்டது, அந்த பயிரால் எப்படி பட்ட பக்க விளைவுகள் வந்தன போன்றவை ரகசியங்கள் ஆகும். நீங்களோ நானோ, நான் சாப்பிடும் வெண்டைக்காய் எந்த மாதிரியான பக்க விளைவுகளை உண்டாகியது என்பது தெரிந்து கொள்ள முடியாது.
  • மரபணு மாற்றப்பட்ட பயிர்களை அனுமதிபதா இல்லையா என்ற உரிமை மாநில அரசுக்கு இனிமேல் கிடையாது.
  • எல்லாவற்றிகும் மேலாக, தகவல் அறியும் சட்டம் (Right to information Act – RTI)மூலம் விவரங்கள பெற முடியாது!  ஏதோ மறைக்க தானே இந்த வேடங்கள்? இந்த தொழிற்நுட்பம் அப்பழுக்கற்றது என்று முழங்க படுகிறதே, அப்படி ஆனால், என் இந்த கவசம்?

நீங்கள் இதை தடை செய்ய வேண்டும் இன்று நினைத்தால், இந்த இணையத்தளத்தில் மனு போட்டு பிரதம மந்திரி அலுவலகத்திற்கு ஈமெயில் அனுப்பவும்.

இந்த மசோதாவை பற்றி தெரிந்து கொள்ள இங்கே படிக்கவும்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “மரபணு வாய்பூட்டு சட்டம் முன்னேறுகிறது ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *