மோசமாகி வரும் சுற்று சூழல்

Center for Science and Environment (CSE) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியா 2018 ஆண்டில் உலகளவில் சுற்று சூழல் ரேங்கில் 180 நாடுகளில் 177 வது இடத்தில கீழே இறங்கி உள்ளது. 2016 ஆண்டில் 141 இடத்தில இருந்தது..

இப்படி உலகளவில் இந்தியா சுற்று சூழலில் மோசமாகி வருவதின் காரணங்கள் என்ன?

காற்றில் மாசு குறைப்பதில் முன்னேற்றமின்மை, வெப்பத்தை அதிகரிக்கும் கிரீன்ஹவுஸ் காஸ் குறைப்பதில் வேகமின்மை, நாட்டில் உள்ள பல்லுயிர் காப்பதில் தொய்வு போன்ற காரணங்கள்..

இவற்றில் ஒன்று ஒன்றாக இப்போது பார்ப்போமா?

காற்றில் மாசு:

இந்த பிரச்னை தென் இந்தியாவில் அவ்வளவு அதிகம் காணப்படுவதில்லை. வட இந்தியாவில் வாழும் தமிழர்கள் நிச்சியம் பார்த்திருப்பார்கள். குறிப்பாக டெல்லி, ஹரியானா பஞ்சாப போன்ற மாநிலங்களில் குளிர் காலத்தில் காற்றில் மிகவும் அதிகம் தூசு சேர்ந்து உள்ளது. இதை பற்றி ஏற்கனவே நாம் படித்து உள்ளோம்.

 

 

 

 

 

 

 

 

 

இப்போது டெல்லி உலகளவில் அதிகம் காற்று மாசு மிகுந்த நகரம். சிறிது வருடங்கள் முன்பு இந்த பெயரை சம்பாதித்த சைனாவின் பெய்ஜிங் நகரை ஓவர்டேக் செய்து விட்டோம். கோடை காலத்தில் 65% நாட்கள் மோசமான மற்றும் மிக மோசமான காற்றும் குளிர் காலத்தில் 85% நாட்கள் மிக மோசமான காற்றும் காணப்பட்டது.

லக்னோ, கான்பூர்,கொல்கொத்தா என்று பல இடங்களின் நிலைமையும் இப்படிதான்.

ஹை தமிழ்நாடு அப்படி எல்லாம் என்று நாம் பீத்தி கொள்ள வேண்டாம். தமிழ்நாட்டில் சில இடங்களில் மட்டுமே காற்று மாசு கருவிகள் உள்ளன. ஆகையால் நிலைமை எப்படி என்று நமக்கு தெரியவே தெரியாது. வீடு காட்டும் இடங்கள், சிமெண்ட் தொழிற்சாலைகள், ஆஸ்பெஸ்டாஸ் தொழிற்சாலைகள், கல் உடைக்கும் இடங்கள், போன்ற இடங்களில் நிச்சயம் அபாயகரமான நிலையில் மாசு இருக்கும். அதுவும் தமிழ்நாட்டில் உள்ள சிமெண்ட் ஆலைகள் பல ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்டன. பழைய ஆலைகள் காற்றை அதிகம் மாசு படுத்தவே செய்யும்..

நீங்க உங்கள் ஹெல்த்தை பாத்து கொள்ள இந்த மொபைல் ஆப் இன்ஸ்டால் பண்ணுங்க. உங்கள் ஊரில் மாசு கருவி இன்ஸ்டால் செய்து இருந்தால் அன்றைய மாசு பற்றிய தகவலை பார்க்கலாம்!

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *