வரும் நீர் நெருக்கடி!! – 1

இந்தியாவில் உணவு பற்றாக்குறை  குறைந்து இருக்கலாம். ஆனால் இன்னும் சில ஆண்டுகளில் நம் முன்னால் பயங்கரமாக எதிர்கொள்ள போகிற நெருக்கடி என்ன தெரியுமா? நீர் நெருக்கடி..

இந்த சில செய்திகளை நீங்கள் படித்தாலே தெரியும், நீர் பற்றாக்குறை எந்த அளவு உள்ளது என்று. அதை தவிர ஒரு சாதாரண குடும்பம், லாரி நீர், குடிக்க நீர் என்று மாதத்திற்கு 3000 ரூபாய் செல்வு செய்வது என்பது இப்போது சாதாரணம்.

எப்படி இங்கு நாம் வந்து சேர்ந்து உள்ளோம்? சற்று புரிந்து கொள்வோமா?

1. என் தலைமுறையில் சிறுவனாக இருந்த போது ஆறுகளிலும் காவாய்களிலும், குளங்களிலும் குளித்து உள்ளேன். இப்போது எந்த நீர்நிலையிலும் குளிக்கும் படி இல்லை.. நம் முன்னோர்கள் மிகவும் அறிவு சாலிகள். பெரிய பெரிய குளங்களை பள்ளமாக உள்ள இடத்தில கட்டி, அவை கெட்டுப்போகாமல் இருக்க அவற்றை கடவுளோடு சேர்த்து கோயில் குளம் என்று அமைத்தனர்.

அதை தவிர, குளங்களை சுற்றி மழை நீர் இயற்கையாக வர வழி செய்து வைத்தனர். பல சிறு ஊர்களில் நடுவில் உள்ள கோயில் குளம் தான் நிலத்தடி நீரை சேர்த்து எல்லார்க்கும் நீர் கொடுத்து வந்தது..

கடந்த 50 ஆண்டுகளில், குளங்கள் எல்லாம் ஆக்ரமிப்பு செய்யப்பட்டன. குப்பைகள் கொட்டும் இடமாக மாறின.

சென்ற தலைமுறை வரை குளங்களில் குப்பை போடுவது, அசிங்கப்படுத்துவது இல்லாமல் இருந்தது. தெய்வ குற்றம் என்று பயந்தனர். இப்போது கடவுள் நம்பிக்கை இல்லா கழகங்கள் 50 ஆண்டுகளில் பராமரிப்பு இல்லமால் கோயில் குளங்கள் எல்லாம் குட்டிச்சுவர் ஆகி விட்டன.

நம்மால் என்ன செய்ய முடியும் என்கிறீர்களா?

ஊர் ஊராட்சி தலைவரோ பஞ்சாயத்து தலைவரை பார்த்து குளங்களை சுத்தம் செய்ய சொல்லுவோம். ஆக்கிரமிப்புகளை அகற்ற சொல்லுவோம்.. வாட்ஸாப்ப் முகநூலில் பிரச்சாரம் செய்வோம். முயன்று தான் பார்ப்போமே..

நம் முன்னோர்கள் விட்டு சென்ற மிக பெரிய வாழ்வியல் சொத்தான கோயில் குளங்களை மீட்பதுதான் நாம் அவர்களுக்கு கொடுக்கும் மரியாதையாகும்..

தொடரும்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *