சரி, கோயில் குளங்களை சுத்தம் படுத்தினால் நல்லதுதான். எப்படி செய்வது என்கிறீர்களா? தமிழ்நாட்டிலேயே நடந்த ஒரு நிகழ்வை அறிந்து கொள்வோம். இது Down to earth என்ற இணையத்தளத்தில் பதிவாகி உள்ளது..
இந்த கோயில் குளம் காஞ்சிபுரம் மாவட்டத்தில், சென்னையில் இருந்து 30 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பம்மல் ஊருல அகிஈஸ்வரன் சிவன் கோயில் குளம். சென்னையில் உள்ள எஸ்னோரா என்ற நிறுவனம் அந்த ஊரில் இருந்த மக்களோடு சேர்ந்து இந்த குளத்தை உயிர்பித்தது. எஸ்னோரா நிறுவனத்தை சேர்ந்த குமார் கூறுகிறார்:
இந்த குளம் 600 ஆண்டுகள் ஆனது. இந்த குளத்தின் நீர் 35 வருடங்கள் முன்பு வரை குடிக்க பயன் படுத்தப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக நீர் வரும் பாதைகள் அடைப்பட்டன. குளத்தின் ஆழம் குறைந்தது. சிறிது சிறிதாக குறைந்து 2000 வருடம் இதன் ஆழம் 12 அடியில் இருந்து, 4 அடிக்கு குறைந்தது,.
அந்த ஊரை சேர்ந்த குமார், இந்த குளத்தை உயரிப்பிக்க 2000 ஆண்டில் முயற்சி ஆரம்பித்தார். அப்போது, குளம் மிகவும் மோசமாக இருந்தது. சாக்கடை கலந்த நீரில், உயிர் இழந்த மிருகங்கள் மிதந்தன. தன்னுடைய ஊராட்சியில் பேசி பார்த்தார். நிதி கிடைக்கவில்லை. சென்னையை சேர்ந்த எஸ்னோராவை அணுகினார்.
ஊர் மக்கள், பள்ளி சிறுவர்கள் எல்லோரும் சேர்ந்தனர். 15 லட்சம் செலவு செய்து 2.6 ஹெக்டர் அளவில் இருந்த குளத்தை சுத்தம் செய்து, ஆழம் செய்து, அடைசலைகளை நீக்கினர். இப்போது நிலத்தடி நீர் சுற்றும் உள்ள 5 கிலோ மீட்டர் வரை ஏறி உள்ளது. நீருக்கு காசு கொடுத்து வாங்குவது நின்றது.
இது மட்டும் இல்லாமல் வருடா வருடம் சுத்தம் செய்து மராமத்து செய்து வருகின்றனர் ஊர் மக்களும் எஸ்னோரா நிறுவனமும்.
ஒரு தடவை செலவு செய்து விட்டால், வருடா வருடம் சிறிய பராமரிப்பு செலவு மட்டுமே. கோயில்களை பராமரிக்கும் அறநிலைய துறை இந்த செலவை நிச்சயம் செய்யலாம். மனதிருந்தால்!
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்