விஜய் மல்லையா என்று ஒரு பெரும் பணக்காரர் இருக்கிறார். போர்பஸ் பத்திரிகை கணக்கு படி அவருக்கு ஒரு பில்லியன் டாலர் (ஐயாயிரம் கோடி ருபாய்) சொத்து இருக்கிறது. இவரின் முதல் தொழில் பீர் தயாரிப்பது. இதை தவிர, F1 race கார்கள், IPL டீம், பணக்கார பெண்கள், கப்பல்கள் எல்லாம் உண்டு.அவர் கிங் பிஷேர் ஏர்லைன்ஸ் என்று ஏர்லைன்ஸ் வாங்கி நடத்த ஆரம்பிக்கிறார்.
என்ன, பசுமை தமிழகத்திற்கும், கோடிஸ்வர மல்லையா என்ன தொடர்பு என்று யோசிகின்றீர்களா? வருகிறேன் விஷயத்திற்கு.
இந்த மல்லையா பெண்கள் பின்னால் சுத்தவும் IPL வேஸ்ட் செய்தும் நேரத்தை வீணாக்கி ஏர்லைன்ஸ் நஷ்டத்தில் மூழ்கி விட்டது. பெட்ரோல் கம்பனிகள் கை விரிதததால், flight ரத்து செய்ய படுகின்றன.
இவர், நேராக நம் மதிய மந்திரியை பார்த்து, நிதி உதவி கேட்கிறார். அந்த மந்திரியும், அடுத்த நிமிடம் நிதி அமைச்சரை பார்த்து பேசலாம் என்கிறார்.
இந்த பெண் பொறுக்கி மல்லையா நம் பொதுவுடமை செய்யப்பட்ட வங்கிகள் எவ்வளவு கடன் கொடுத்து உள்ளன தெரியுமா? 7000கோடிகள்!
அத்தனையும் வேஸ்ட் செய்து விட்டு இப்போது மத்திய அமைச்சரிடம் சொல்லி, வங்கிகள் மேலும் கடன் கொடுக்க கோரிக்கை செய்கிறார். அவரும் பரிசீலனை செய்ய வேண்டும் என்கிறார்.
நம் நாடு விவசாயத்திற்கு கொடுக்க படும் ஒவ்வொரு நிதி உதவியும் நிறுத்த பட்டு வருகின்றது. இதனால், உர விலைகள் ஏறி வருகின்றன. இதை பற்றி எல்லாம் நம் அரசிற்கு கவலை இல்லை.
மல்லையா போன்ற திருட்டு பயல்கள் நம் வரி பணமான 7000 கோடியையும் வீணாகி விட்டு மேலும் கை ஏந்தி நிற்பார். நம் UPA அரசும் அவருக்கு உதவும். நல்ல அரசு இது!
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்