இந்தியாவிலேயே தமிழக விவசாயிகள் இரண்டாவது இடத்தில கடனாளிகளாக இருப்பதாக 12 கோடி சொத்து மதிப்பு அறிவித்துள்ள விவசாய மந்திரி சரத் பவர் கூறியுள்ளார்.
இப்படி விவசாயிகளை கடனாளிகளாக ஆகியது எது?
இதற்கான முதல் காரணம், ஈடு பொருள்களின் விலை உயர்வே.
ரசாயன உரங்கள், ரசாயன பூச்சி கொல்லிகள் எல்லாம் கச்சா எண்ணை இருந்து தயாரிக்க படுகின்றன. எப்போதெல்லாம் இதன் விலை ஏறுகிறதோ, ரசாயன உரங்களின் விலையும் ஏறுகிறது. பொடஷ் போன்ற கச்சா பொருட்கள் கிடைப்பதும் அரிதாக ஆகி கொண்டு இருக்கிறது.
செலவு அதிகம் செய்து, இப்படி ரசாயன விவசாயம் செய்ய அதிக பணம் தேவை படுகிறது. அதனால், விவசாயிகள், அவர்கள் ஊரில் உள்ள வட்டிக்கு கடன் கொடுக்கும் வட்டிக்காரர்கள் கேட்டு கடன் பெறுகிறார்கள். திடீரென்று பெய்யும் மழை, பூச்சி தாக்குதல் போன்றவற்றால் பாதிக்க பட்டால் கடனை கொடுக்க முடியாமல் கடனாளியாக நிற்கின்றார்கள்.
இந்த நிலையில் இருந்து வெளியே வர இயற்கை விவசாயமே வழி. சுற்று வட்டாரத்தில் கிடைக்கும் பொருட்கள் இருந்து இயற்கை உரங்கள், இயற்கை பூச்சி விரட்டிகள் மூலம் கிடைக்கும் மகசூல், சில நேரம் சிறிது குறைந்து இருந்தாலும், ஒரு விவசாயி கடனாளி ஆகும் வாய்ப்பு குறைவு! ஏனென்றால், இயற்கை விவசாயத்தில் ஈடு பொருட்களின் செலவு குறைவு.
தமிழக விவசாயிகள் கடனாளி நிலைமையில் இருந்து வெளியில் வர இதுதான் வழி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்