ஆடி பட்டத்தில் அதிக மகசூல் பெற மக்காசோளம்

ஆடி பட்டத்தில் மக்காசோளம் பயிரிட்டு அதிக வருவாய் பெற விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  • தென்மேற்கு பருவமழை காலத்தில் ஆடிபட்டம் விவசாயிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த பருவத்தில் குறைந்த தண்ணீர் மற்றும் குறைந்த செலவில் அதிக வருமானத்தை ஈட்ட விவசாயிகள் மக்காச்சோளம் பயிரிடலாம்.
  • இதில் கோ.எச்.(எம்) 4 என்ற 94 நாட்கள் பயிர் மற்றும் கோ.1 என்ற 110 நாட்கள் பயிர் ரகங்கள் உள்ளன.
  • ஒரு ஏக்கருக்கு 6 கிலோ விதைகளை, ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பன்டாசிம் சேர்த்து விதைநேர்த்தி செய்ய வேண்டும்.
  • ஒரு ஏக்கருக்கு அசோஸட்பைரில்லம் ஒரு பொட்டலம் போட்டு நுண்ணுயிர் விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
  • பின்பு 4 செ.மீ., ஆழத்தில் விதைகளை ஊன்றி நன்கு மண்ணால் மூட வேண்டும்.
  • ஒவ்வொரு குழியிலும் ஒன்று அல்லது இரண்டு விதைகளை ஊன்றலாம்.
  • விதைத்த எட்டாம் நாள் குழிக்கு நன்கு வளர்ந்துள்ள ஒரு செடியை மட்டும் விட்டுவிட்டு மற்றதை நீக்க வேண்டும்.
  • செடி முளைக்காத இடத்தில் குழிக்கு இரண்டு விதைகள் ஊன்றி நீர் பாய்ச்ச வேண்டும்.
  • கடைசி உழவிற்கு முன் அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா தலா 4 பாக்கெட்டுகளை தொழு உரத்துடன் கலந்து இடவேண்டும்.
  • இதனையடுத்து 18 மற்றும் 40வது நாட்களில் கையால் களை எடுத்து 7 முதல் 10 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும்.
  • இவ்வாறு முறையாக பராமரித்தால் ஒரு ஏக்கருக்கு 3 மெட்ரிக் டன் மகசூலை பெறலாம்.
  • தற்போது ஒரு கிலோ மக்காசோளம் 13 ரூபாய் வீதம் மொத்தம் 39 ஆயிரம் ரூபாய் கிடைக்க வாய்ப்புள்ளது.
  • ஒரு ஏக்கருக்கு உழவு, விதை, உரம், ஆள் கூலி என மொத்தம் 8 ஆயிரம் ரூபாய் செலவாகும்.
  • விவசாயிகள் இந்த ஆடிப்பட்டத்தை முறையாக பயன்படுத்தி மக்காசோளம் பயிர் செய்து பயனடையலாம்.

இவ்வாறு  விழுப்புரம் வேளாண் இணை இயக்குனர் ராஜேந்திரன்(பொ) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார் .

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *