குறைந்த நீரில் நல்ல மகசூல் பெற மக்காச்சோளம்

பொன்னமராவதி வட்டார விவசாயிகள் குறைந்த நீரில் அதிக வருமானம் பெற மக்காச்சோளம் பயிரிடலாம் என்றார் வேளாண் உதவி இயக்குநர் சி. ஜெயபாலன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

  • உணவு தானிய உற்பத்தியின் விளைச்சலை பெருக்க மத்திய,மாநில அரசுகள் பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் உணவு உற்பத்தியில் தன்னிறைவை அடைய திட்டமிடப்பட்டுள்ளது.
  • எனவே,குறைந்த நீரினை பயன்படுத்தி குறுகிய காலத்தில் அதிக வருமானம் தரக்கூடிய சிறு தானியப் பயிர்களை சாகுபடி செய்து கூடுதல் மகசூல் பெறலாம்.
  • நீர்ப்பாசன வசதிக்கேற்ப வீரிய மக்காச்சோள பயிரினை சாகுபடி செய்வதின் மூலம் அதிக மகசூலும்,கூடுதல் வருமானமும் பெறலாம்.
  • ஏக்கருக்கு 6 கிலோ விதைகளை 60  ஷ் 20 செ.மீட்டர் இடைவெளியில் நீளமான பார்களில் விதைப்பு செய்ய வேண்டும். பயிர் எண்ணிக்கை ஒரு சதுர மீட்டரில் 6 – 7 செடிகள் இருக்க வேண்டும். மண் பரிசோதனை செய்து உரமிடுவது நல்லது. அல்லது தொழு உரம் மற்றும் தழை, மணி,சாம்பல் சத்துக்கள் இடலாம். விதைகளை விதைத்தவுடன் ஏக்கருக்கு 5 கிலோ சிறு தானிய நுன்னூட்டக் கலவை உரத்தினையும் தூவ
  • வேண்டும். களைகளை கட்டுப்படுத்த விதைத்த 3 வது நாள் அட்ரசின் என்ற களைக்கொல்லியை ஏக்கருக்கு 500 கிராம் வீதம் 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும்.
  •  நன்கு முதிர்ச்சி அடைந்த 100 முதல் 110 நாள்கள் வயதுடைய கதிர்களை 12% வரை காயவைத்து  விற்பனை செய்யலாம்.
  • இதன் மூலம் 3 மாதத்தில் குறைந்த பட்சமாக ஏக்கருக்கு ரூ 20 ஆயிரத்துக்கு குறையாமல் வருமானம் பெற்று பயனடையுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *