சோளம் சாகுபடி

சோளம் சாகுபடி மேற்கொண்டால் 100 நாளில் ரூ. 60 ஆயிரம் வருமானம் ஈட்டலாமென்றார் வேளாண் அறிவியல் நிலையத் தலைவர் கே. வைரவன்.

ஆலங்குடி அருகேயுள்ள வம்பன் வேளாண் அறிவியல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மக்காச்சோளம் சாகுபடி பயிற்சியைத் தொடக்கி வைத்து அவர் பேசியது:

தானியங்களின் அரசியாக திகழும் மக்காச்சோளத்தில் சக்தி 349 கிராம், கலோரி, புரதம் 10.4 கிராம், கொழுப்பு 1.9 கிராம், மாவுச்சத்து 72.6 கிராம், கால்சியம் 25 மி.கி, இரும்பு 4.1 மி.கி. மற்றும் பி விட்டமின்கள் இருப்பதால் இவை ஒரு முழுமையான ஊட்டச்சத்து கொடுக்கக்கூடிய தானியமாக விளங்குகிறது.

ஆடிப்பட்டம், புரட்டாசிப்பட்டம் மற்றும் தைப்பட்டங்களில் பயிரிடலாம்.

பயிர் வளர்ச்சிக்கு தேவையான தழைச்சத்தை இயற்கை முறையில் எடுத்துக் கொடுக்கும் அசோஸ்பைரில்லத்தை 1 கிலோ விதைக்கு 50 கிராம் வீதமும், வாடல்நோயை கட்டுப்படுத்த சூடோமோனாஸ்  10 கிராம்  அல்லது  டிரைக்கோடெர்மா விரிடி 4 கிராம் வீதம் விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

இவ்வாறு செய்தால் நோய்தாக்கமின்றி வளரும்.

இதில் ஒரு ஏக்கரில் 30-40 குவிண்டால் வரை மகசூல் கிடைக்கும். தற்போதைய விலை நிலவரப்படி 100 நாள்களில் ஒரு ஏக்கரில் ரூ. 45000 முதல் 60000 வரை வருமானம் பெற முடியும். விதை விதைப்பு முதல் அறுவடை வரை இயந்திரம் உள்ளது என்றார்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *