தீவன மக்காச்சோளம் பயிரிட்டால் அதிக லாபம்!

தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத் துறையும், பால்வளத் துறையும், தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்துடன் இணைந்து வேலூர் மாவட்டம், நெமிலி வட்டாரத்துக்கு உள்பட்ட கீழ்வீதி கிராமத்தில் 50 ஏக்கரில் ரூ.64.26 லட்சம் நிதியில் கால்நடை தீவனப் பண்ணை அமைத்து கால்நடைகளுக்குத் தேவையான பல்வேறு வகையான தீவனப் பயிர்களை பயிரிட்டு வருகின்றன.

  •  கால்நடைகளுக்கான தீவனம் எனும் நிலையில், முதலிடத்தைப் பெறுவது தீவன மக்காச்சோளம் ஆகும்.
  •  இதை, இறவைப் பயிராக ஆண்டு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பயிரிடலாம். இப்பயிருக்கான மேலாண்மையில் நிலத்தை தயாரித்தல் என்பது முக்கிய இடம்பெறுகிறது.
  •  நிலத்தை இரும்புக் கலப்பை கொண்டு இரு முறையும், நாட்டுக் கலப்பை கொண்டு மூன்று அல்லது நான்கு முறையும் உழ வேண்டும். மேலும், தொழுஉரம் இடும்போது எக்டேருக்கு 25 டன் என்ற அளவில் தொழு உரம் அல்லது 10 பாக்கெட் அசோஸ்பைரில்லம் (2 கிலோ), 10 பாக்கெட் பாஸ்போபாக்டீரியா (2 கிலோ) உள்ளிட்டவை அல்லது 20 பாக்கெட் அசோபாஸ் (4 கிலோ) ஆகியவற்றை உழும்போது வயலில் இட்டு உழ வேண்டும்.
  •  2 முதல் 3 முறை உழவு செய்து நிலத்தைப் பண்படுத்தி 60 செ.மீ. இடைவெளியில் பாத்தி அமைக்க வேண்டும். 30 செ.மீ. இடைவெளியில் பாத்தி பிடிக்கவும் அல்லது பாசன நீரின் அளவைப் பொறுத்தும் நிலத்தின் சரிவைப் பொறுத்தும் 10 அல்லது 20 சதுர மீட்டருக்கு பாத்திகள் அமைக்க வேண்டும்.

 உரமிடுதல்:

  • மண் பரிசோதனையின் படி உரமிடவும். மண் பரிசோதனை செய்யாவிடில் (எக்டேருக்கு) அடியுரமாக 30:40:20 கிலோ தழை, மணி, சாம்பல் சத்து இடவும். விதைத்து 30-ஆவது நாளில் மேலுரம் (எக்டேருக்கு) 25 கிலோ தழைச் சத்தை இடவும்.

 விதைப்பு:

  • இடைவெளி 30 ல 15 செ.மீ. இருக்குமாறு பார்த்துக் கொள்ளுதல் அவசியம். விதை அளவு எக்டேருக்கு 40 கிலோ. விதைப்புக்கு முன் மூன்று பாக்கெட்டுகள் அசோஸ்பைரில்லம் (எக்டேருக்கு 600 கிராம்) உயிர் உரத்தைக் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

 நீர் நிர்வாகம்:

  • விதைத்தவுடன் நீர்ப்பாய்ச்சுதல் அவசியம். களை நிர்வாகம் என்பது இதில் அதிக அளவில் இல்லை என்றாலும் களைகள் இருக்கும்போது அவற்றை நீக்கவும்.

 அறுவடை:

  • கதிர் பால் கட்டும் பருவத்தில் இருக்கும்போது அறுவடை செய்யவும்.

தீவன மக்காச்சோளம் குறித்து மேலும் விவரங்கள் தேவைப்படுவோரும், இப்பயிருக்கான விதைகள் தேவைப்படுவோரும் விதைகளைத் தயாரிக்க முனையும் விவசாயிகள், அந்தந்த மாவட்டங்களில் உள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி, ஆராய்ச்சி மையத் தலைவர் அல்லது உதவிப் பேராசிரியர்களை அணுகினால் அவர்கள் இதுகுறித்து விளக்குவர்.

நன்றி: தினமணி

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *