மக்காச்சோள கழிவு, பால் உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதால், தம்மம்பட்டி பகுதியில், கறவைமாடு வளர்ப்பவர்கள், அதை, அதிகளவு வாங்கிச் செல்கின்றனர்.
வறட்சியால், கால்நடைகளுக்கு பசுந்தீவனம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், தவிடு, புண்ணாக்கு, தீவனத்தின் விலையும், கடுமையாக உயர்ந்துள்ளது. இது, கறவைமாடு வளர்ப்பவர்களுக்கு, பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
அதனால், பால் உற்பத்தி வெகுவாக குறைந்தது. தீவன பற்றாக்குறையால், சமாளிக்க முடியாத விவசாயிகள், குறைந்த விலைக்கு, கறவை மாடுகளை விற்கும் பரிதாபமான நிலைக்கு ஆளாகினர்.
இந்நிலையில், குறைந்த விலையில் கிடைக்கும் மக்காச்சோள கழிவை, மாடுகளுக்கு கொடுப்பதால், அதிகளவு பால் கொடுப்பதாக, விவசாயிகள் கூறுகின்றனர்.
இதுகுறித்து, விவசாயி ஒருவர் கூறியதாவது:
- கிழங்கு திப்பி (சேகோ கழிவு) கூடை, 100 ரூபாய்க்கும், தவிடு மூட்டை, 400 ரூபாய்க்கும், புண்ணாக்கு மூட்டை, 2,140 ரூபாய்க்கும் விற்கிறது.
- தீவனங்களின் விலை உயர்வால், மாடு ஒன்றுக்கு, தீவன செலவு, மாதத்துக்கு சராசரியாக, 2,500 ரூபாய் ஆகிறது.
- தற்போது கிடைக்கும் பால் விலைக்கு, இது கட்டுபடியாகவில்லை.
- ஆனால், கிலோ, ஆறு ரூபாய்க்கு கிடைக்கும் மக்காச்சோள திப்பியை, மாடுகளுக்கு கொடுப்பதால், பால் அளவு அதிகரிக்கிறது. ஒரு மாட்டுக்கு, 600 ரூபாய் மட்டுமே, மாதத்துக்கு செலவாகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்