மக்காச்சோளத்தை தாக்கும் தண்டழுகல் நோய்

மக்காச்சோளத்தை தாக்கும் “ப்யூசேரியம்’ தண்டழுகல் நோயை கட்டுப்படுத்த ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் பரமசிவன் மற்றும் சேதுராமன் ஆலோசனை கூறினர். அவர்கள் கூறியதாவது:

  • திண்டுக்கல் மாவட்டத்தில் மக்காச்சோளம் பிரதான பயிராக உள்ளது. மக்காச்சோளம் பயிர், மண் மூலம் பரவும் “ப்யூசேரியம்’ தண்டழுகல் நோயினால் பாதிக்கப் படுகிறது.
  • இந்நோய் பாதித்தால் தண்டின் உள்பகுதியில் உள்ள திசு சேதமடையும். இதனால் தண்டு பகுதி மிருது வாகவும், கணுக்கள் முறுகியும் காணப்படும். பூத்தபின் இந்நோய் வந்தால், வேரையும், தண்டின் உட் பகுதியையும் தாக்கும். இதனால் சோள கதிருக்கு நீர் கிடைக்காமல் காய்ந்து, கீழ்நோக்கி தொங்கிவிடும்.

நோய் காரணம்

  • தொடர்ந்து ஒரே பயிரை பயிரிடுவதாலும், மக்காச் சோளத்தை தொடர்ந்து கரும்பு, பருத்தி, தக்காளி பயிரிடுவதாலும் ஏற்படுகிறது.
  • அறுவடைக்கு பின் தட்டை நன்கு மட்காமலிருந்தாலும் இப்பாதிப்பு வரலாம். பூக்கும் போது அதிகமான வெப்பமான நிலை இருந்தாலும் தாக்கம் அதிகமாக இருக்கும்.இதனை தடுக்க, பயிர் சுழற்சி முறையை கடைபிடிக்க வேண்டும். நோய் தாக்குதல் உள்ள இடத்தில் இருந்த விதைகளை பயிரிடக்கூடாது. தண்டு மற்றும் கதிர் துளைப்பான் பூச்சி தாக்குதல் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • வயலில் கடைசி உழவின் போது “ட்ரைக்கோடெர்மாவிரிடி’ அல்லது “சூடோமோனாஸ் புளோர சன்ஸை’ ஏக்கருக்கு ஒரு கிலோ மற்றும் 50 கிலோ சாணத்துடன் கலந்து வயலில் இட வேண்டும்.
  • வேப்பம் புண்ணாக்கு ஏக்கருக்கு 60 கிலோ என்ற அளவில் வயலில் இடுவதின் மூலம் தடுக்கலாம். விவசாயிகள் இனி வரும் காலங்களில் முன்னெச்சரிக்கையுடன் நடக்க வேண்டும், என்றனர்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *