- விவசாயிகள் கூடுதல் வருமானம் பெற 90 முதல் 100 நாட்களில் மகத்தான மகசூல் கிடைக்கும் மக்காச்சோளத்தை சாகுபடி செய்யலாம்.
- குறுகிய கால பயிரான மக்காச்சோளத்தில் கோ 1, கங்கா, கோ ஹெச் (எம்) 4, கோ ஹெச் (எம்) 5 ஆகிய வீரிய ஒட்டு ரகங்களை பயிரிடலாம்.
- விதைமூலம் பரவும் நோய்களை கட்டுப்படுத்திட ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பன்டாசிம் அல்லது 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி கலந்து 24 மணிநேரம் கழித்து தலா ஒரு பாக்கெட் அசோஸ்பரில்லம், பாஸ்போ பாக்டீரியா உயிர் உரங்களை ஆறிய அரிசி கஞ்சியுடன் கலந்து நிழலில் உலர்த்த வேண்டும். பின்னர் அந்த விதையை விதைப்பு செய்ய வேண்டும்.
- மண்ணின் வளத்தை மேம்படுத்த ஏக்கருக்கு 5 டன் தொழு உரமிட வேண்டும்.
- பொதுப்பரிந்துரையான 54 கிலோ தழைச்சத்து, 25 கிலோ மணிச்சத்து, 20 கிலோ சாம்பல் சத்து தரவல்ல உரங்களை இட வேண்டும்.
- 30 கிலோ யூரியா, 156 கிலோ சூப்பர் பாஸ்பேட், 33 கிலோ பொட்டாஷ் உரங்களை அடியரமாக இட வேண்டும்.
- நுண்ணூட்டச் சத்து பற்றாக்குறையை தவிர்க்க ஏக்கருக்கு 5 கிலோ நுண்ணூட்ட உரக்கலவையை 20 கிலோ மணலுடன் கலந்து விதைகளை ஊன்றுவதற்கு முன் மேலுரமாக இடவேண்டும்.
- மண்ணின் தன்மைக்கு ஏற்றாற் போல் 10 முதல் 12 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் விடவேண்டும்.
- குருத்துப்புழு, சாம்பல் வண்டை கட்டுப்படுத்த எண்டோ சல்பான் 4டி அல்லது பாசலோன் 4 கிலோ தூளை 16 கிலோ மணலுடன் கலந்து இலையும்,
- தண்டுப்பகுதியும் சேரும் இடங்களில் உள்ள இடைவெளியில் இடவேண்டும்.
- அசுவினியை கட்டுப்படுத்த ஏக்கருக்கு 200 மில்லி டைமிதோயேட்டை தெளிக்க வேண்டும்
அறுவடை முறை:
- மக்காச்சோள கதிரின் மூடிய உறை மஞ்சளாகவும், விதைகள் சற்று கடினமாகவும் மாறிய பின் கதிரை மட்டும் தனியாக அறுவடை செய்ய வேண்டும்.
- மக்காச்சோள தட்டையை காயவிடாமல் பச்சையாக அறுவடை செய்து சிறுசிறு துண்டுகளாக செட்டி கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்தலாம்.
- ஏக்கருக்கு இறவையில் 2,500 கிலோ முதல் 3,000 கிலோ வரை மகசூல் கிடைக்க வாயப்புள்ளது.
- ஒரு கிலோ மக்காச்சோளத்தை 10 ரூபாய்க்கு விற்பனை செய்தாலும் ஏக்கருக்கு 25,000 ரூபாய் முதல் 30,000 ரூபாய் வரை லாபம் கிடைக்கும்.
இவ்வாறு தர்மபுரி மாவட்டத்தில் மக்காச்சோளம் பயிர் செய்ய வேளாண் துறையினர் அறிவுரை வழங்கியுள்ளனர்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்