மக்காச்சோள சாகுபடியில் அதிக லாபம் பெறும் வழிகள்

விவசாயிகள் மக்காச்சோள சாகுபடியில் அதிக லாபம் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து தூத்துக்குடி வேளாண்மைத் துறை சார்பில் விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து வேளாண்மைத் துறை இணை இயக்குநர் தட்சிணாமூர்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

 • ஒரு ஹெக்டருக்கு 12.5 டன் தொழுஉரத்துடன் அúஸாஸ்பைரில்லம் 10 பாக்கெட் கலந்து பரப்பி நன்கு உழவு செய்யவும்.
 • ஹெக்டருக்கு 20 கிலோ விதை என்ற அளவில் நல்ல தரமான பூஞ்சாண விதை நேர்த்தி (டிரைக்கோடெர்மா விரிடி 4 கிராம் கிலோ விதை வீதம்) செய்யப்பட்ட விதைகளை செடிக்கு செடி 20 செ.மீ., பாருக்கு பார் 45 செ.மீ. என்ற அளவில் விதைக்கவும்.
 • அதிக மகசூல் பெற ஒரு ஹெக்டேருக்கு 1,11,100 செடிகள் இருக்குமாறு பயிர் எண்ணிக்கையைப் பராமரிக்கவும்.
 • அடியுரமாக யூரியா 65 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 188 கிலோ, மூரியேட் ஆப் பொட்டாஷ் 50 கிலோ விட வேண்டும்.
 • அடியுரமாக கால் பகுதி யூரியா முழு அளவு சூப்பர் பாஸ்பேட் மற்றும் மூரியேட் ஆப் பொட்டாஷ் விதைப்பதற்கு முன் இடவும்.
 • கரிசல் மண்ணில் துவரையை ஊடுபயிராகவும், செம்மண்ணில் உளுந்து அல்லது தட்டைப்பயறை ஊடுபயிராகவும் பயிரிடலாம்.
 • விதைத்த 3- வது நாளில் அட்ரசின் களைக் கொள்ளியை ஹெக்டேருக்கு 500 கிராம் அளவில் தெளிக்கவும் பயறு வகைப் பயிர்கள் ஊடுபயிராக செய்திருந்தால் ஹெக்டேருக்கு அலக்குளோர் 4லி (அ) பெண்டிமெத்திலின் 3.3 லி தெளிக்கவும். பின் 40, 45 வது நாளில் கைக்களை ஒன்று எடுக்கவும்.
 • கதிரின் மேல் தோல் பழுத்து முதிர்ந்து காய்ந்தவுடன் அறுவடை செய்யவும்.
 • கோணி ஊசியைக் கொண்டு கதிரின் மேல் தோலைக் கிழித்து கதிர்களை பிரித்து எடுக்கவும்.
 • கதிர்களை சூரிய வெளிச்சத்தில் நன்கு காய வைத்து விசைக் கதிரடிப்பான் கொண்டோ அல்லது டிராக்டரை கதிர்களின் மேலே ஓட்டியோ மணிகளைப் பிரித்தெடுக்கலாம்.
 • மணிகளைத் தூற்றி சுத்தப்படுத்தி கோணிப்பையில் சேமிக்கவும்.
 • ஒரு ஹெக்டருக்கு 6.25 டன் முதல் 7.5 டன் வரை மகசூல் பெறலாம்.
 • மக்காச்சோளத் தட்டை பச்சையாக இருக்கும் போது மாட்டுக்கு நல்ல தீவனமாகும்.
 • பச்சைத் தட்டையை துண்டு துண்டாக நறுக்கி மாட்டுக்குத் தீவனமாக பயன்படுத்தலாம்

நன்றி: தினமணி 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *