மக்காச் சோளத்தில் அதிக மகசூல் பெற யோசனை

மக்காச் சோளத்தில் அதிக மகசூல் பெற உரங்கள் எவ்வளவு இட வேண்டும் என்று வேளாண்மை அதிகாரி யோசனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து, வேளாண்மை உதவி இயக்குநர் ராஜகோபால் வெளியிட்டுள்ள  செய்திக்குறிப்பு விவரம்:

 • தற்போது மானாவாரியிலும், இறவையிலும் விருதுநகர் மாவட்டத்தில் மக்காச் சோளம் அதிகப் பரப்பளவில் பயிரிடப்பட்டு வருகிறது. இதற்குக் காரணம் மற்ற பயிர்களைப் போல் அதிக அளவில் பூச்சி நோய் தாக்குதல் இல்லை என்பது ஒரு காரணமாக இருந்தாலும், சந்தையில் மக்காச் சோளத்துக்கு ஏற்ற இறக்கங்கள் இல்லாமல் கிடைத்து வரும் நிலையான கொள்முதல் விலைதான் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
 •  மக்காச் சோளப் பயிருக்கு எவ்வளவு உரங்கள் இடுகிறோமோ, அதற்குத் தகுந்தாற்போல் மகசூலும் அதிகமாகக் கிடைக்கும்.
 • சாதாரணமாக விவசாயிகள் மக்காச் சோளப் பயிருக்கு தழை, மணி, சாம்பல் சத்து உரங்கள் இடுவதை மட்டுமே வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
 •  நுண்ணூட்டச் சத்துக்களின் குறைபாட்டால் மக்காச் சோளப் பயிர் வளர்ச்சி பாதிக்கப்பட்டு, மகசூல் குறைகிறது. மக்காச் சோளத்துக்குத் தேவையான நுண்ணுரங்கள், சிறு தானிய நுண்ணுரம் என வேளாண்மை விரிவாக்க மையங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
 •  முதல் பாதிப்பாக, முதிர்ந்த அல்லது அடி இலைகளின் ஓரங்கள் மற்றும் இலை நரம்புகளுக்கு இடைப்பட்ட பகுதிகள் மஞ்சளாகவும், வெளுத்தும் காணப்படும். இலைகள் பசுமை இழந்து வெண்மை நிறத் திட்டுகளுடன் காணப்படும்.
 • சில சமயம் முழுப் பயிருமே பச்சையமின்றி வெளுத்து வளர்ச்சி குன்றி காணப்படும்.
 •  மணிகள் சிறுத்து மகசூல் குறையும். ஓர் ஏக்கருக்குத் தேவையான 5 கிலோ சிறு தானிய நுண்ணுரத்தை 15 கிலோ மணலுடன் கலந்து விதைப்பதற்கு முன் நிலத்தில் மேலாகவும், சீராகவும் இட வேண்டும்.
 •  பார் பிடித்து நடவு செய்வதாக இருந்தால், சிறு தானிய நுண்ணுரத்தை மணலுடன் கலந்து பார்களின் 3-ல் 2 பங்கு உயரத்தில் இட வேண்டும்.
 • நுண்ணுரம் வீணாகமல் பயிருக்கு முழுமையாகவும், எளிதாகவும் கிடைக்கச் செய்ய ஆழமாக இடாமல் விதைப்புக்கு முன் நிலத்தில் மேலாக இட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

2 thoughts on “மக்காச் சோளத்தில் அதிக மகசூல் பெற யோசனை

 1. P Nandakumar says:

  Hi, it is said ” sirudanya nunootam ” what is this. How it is made. Please post me to my email
  Thanks
  P Nandakumar Hyderabad
  09391233001

 2. ராஜா says:

  நன்றி பல முறை எல்லோரும் பயன் அடைய வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறேன் வாழ்க வளமுடன் ஒன்றுபடுவோம் விவசாயம் காப்போம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *