வேளாண் பல்கலை சார்பில், புதிய ரக சோளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரகம், மத்திய ஆராய்ச்சி கழகத்தால், அங்கீகரிக்கப்பட்டு, தற்போது விற்பனை துவங்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில், கம்பு, சோளம், கேழ்வரகு, தினை, சாமை, வரகு, குதிரைவாலி, பனிவரகு, மக்காசோளம் உள்ளிட்ட, ஒன்பது வகை தானியங்களின் சாகுபடி அதிகரித்து வருகிறது. இத்தகைய சிறுதானியங்கள் குறித்த ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு, தமிழ்நாடு வேளாண் பல்கலை, சிறுதானியங்கள் துறை சார்பில் நடந்து வருகிறது. நடப்பாண்டு, பல்கலையின் கீழ் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி ஆராய்ச்சி நிலையம் சார்பில், ‘கே.,12’ எனும் சோள ரகம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வேளாண் பல்கலை, சிறுதானியங்கள் துறை பேராசிரியர் ரவிகேசவன் கூறுகையில், ”தமிழகத்தில், கடந்த, மூன்று ஆண்டுகளாக சிறு தானியங்களின் சாகுபடிபரப்பளவு அதிகரித்து வருகிறது.
குறுகிய காலத்தில், அதிக மகசூல் தரக்கூடிய ரகங்களின் ஆராய்ச்சிகளை செய்து வருகிறோம். ‘கே.,12’ எனும் சோள ரகம் ரகத்தின், அனைத்து படிநிலை ஆய்வுகளும் வெற்றியை தந்ததால், ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. ‘ என்றார்.
இந்த ரக சோளம் வறட்சியை தாங்கவல்லது. ஏழு அடி உயரத்துடன், குறுகிய காலத்தில் வளரக்கூடியது. தானியமாகவும், கால்நடைகளுக்கு தீவன பயிராகவும் பயன்படுத்தலாம்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
கே.12 புதிய ரக சோளம் விற்பனைக்கு வந்துவிட்டதா ?என்பதும் எங்கு இந்த புதிய ரகசோளம்விதை கிடைக்கும்.என்பதையும் பசுமை தமிழக செய்திகளில் குறிப்பிட்டால் நன்மையாக இருக்கும்