“கத்திரி, தக்காளி மற்றும் மிளகாய் சாகுபடி தொழில்நுட்பம் குறித்த ஒரு நாள் இலவச பயிற்சி, நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும், 2014 செப்டம்பர் 23ம் தேதி நடக்கிறது’ என, அதன் திட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:
நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், கத்திரி, தக்காளி, மிளகாய் ஆகியவற்றில் உள்ள வீரிய ஒட்டு ரகங்கள், குழித்தட்டு முறையில் நாற்று உற்பத்தி, இரட்டை வரிசை நடவு முறை, சொட்டு நீர்பாசனம் அமைத்தல், நீர்வழி உரமிடல், களை நிர்வாகம், மண்ணின் ஈரத்தன்மை பாதுகாக்கும் தொழில்நுட்பம், ஊட்டச்சத்து குறைபாடு நிவர்த்தி செய்யும் முறை, பூச்சி நோய் நிர்வாக முறை உள்ளிட்ட ஒரு நாள் இலவச பயிற்சி முகாம், வரும், 23ம் தேதி, காலை, 9 மணிக்கு நடக்கிறது.
எனவே, விருப்பமுள்ளவர்கள் நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும், 2014 செப்டம்பர் 22ம் தேதிக்குள் தங்களது பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு, 04286266 345 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்