தென்அமெரிக்காவின் ஊசி இலை துளைப்பான் அல்லது நுண்காய் துளைப்பான் தற்போது இந்திய தக்காளியில் தாக்குதலை துவக்கியுள்ளது.
தர்மபுரி காரிமங்கலம் கொல்லுபட்டி கிராமத்தில் கடந்தாண்டு மார்ச்சில் இதன் தாக்குதல் கண்டறியப்பட்டது. பழுப்புநிற தாய் அந்து பூச்சிகள் நீள்வட்ட வடிவ வெண்ணிற முட்டைகளை இலையின் அடிப்பகுதி, இளம் மொட்டு, காயின் காம்புகளில் இடுகிறது.
தண்டு, காய், பழங்களில் நுண்துளைகளை ஏற்படுத்துகிறது. இதனால் இலைகள் காய்ந்து செடிகள் வாடி வளர்ச்சி முற்றிலும் பாதிக்கப்படுகிறது.
கட்டுபடுத்தும் வழிகள்
- கோடை உழவு செய்வதன் மூலம் மண்ணில் மறைந்துள்ள கூட்டுப்புழுக்களை வெளிக் கொணர்ந்து அழிக்கலாம்.
- எக்டேருக்கு 40 – 50 வரை இனக்கவ்ச்சி பொறிகள் வைத்து தாய் அந்து பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.
- அறுவடையின் போது பாதிக்கப்பட்ட பழங்களை சேகரித்து அழிக்க வேண்டும்.
- டிரைகோகிரம்மா கைலோனிஸ் அல்லது டிரைகோகிரம்மா ப்ரட்டியோசம் முட்டை ஒட்டுண்ணியை எக்டேருக்கு 40 ஆயிரம் முதல் 50ஆயிரம் வரை விடலாம்.
- ஒரு லிட்டருக்கு 2 மில்லி பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ் கலந்து தெளிக்கலாம்.
–இந்திராகாந்தி, வேளாண் துணைஇயக்குனர், நீர் மேலாண்மை பயிற்சி நிலையம், மதுரை.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்