தக்காளி சாகுபடியில் பூச்சிக்கொல்லி மருந்தை தவிர்க்கும் புதிய தொழில் நுட்பத்தை காந்திகிராம பல்கலை வேளாண் அறிவியல் மையம் அறிமுகப்படுத்தியது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 5 ஆயிரம் ஏக்கரில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. ஏக்கருக்கு சாதாரண முறையில் 25 டன், இஸ்ரேல் தொழில்நுட்ப முறையில் 30 டன் சராசரியாக மகசூல் கிடைக்க வேண்டும். இதில் பூச்சித் தாக்குதலால் மகசூலில் 10 சதவீதம் வரை இழப்பு ஏற்படுகிறது. இதற்காக விவசாயிகள் அதிகளவில் பூச்சிக்கொல்லி மருந்தை பயன்படுத்துகின்றனர்.இதனால் நுகர்வோருக்கு பாதிப்பு ஏற்படுகிறது. பூச்சிக்கொல்லி மருந்தை தவிர்க்க, புதிய தொழில்நுட்பத்தை காந்திகிராம வேளாண் அறிவியல் மையம் அறிமுகப்படுத்தியது.
இதில் தக்காளி பயிர்களுக்கு இடையில் செண்டுமல்லியும், நிலத்தை சுற்றிலும் வயல் ஓரங்களில் மக்காளச்சோளமும் பயிரிட வேண்டும்.
செண்டு மல்லி காய்ப்புழுக்களையும், மக்காச்சோளம் சாறு உறிஞ்சும் பூச்சிகளையும் கட்டுப்படுத்தும். இதனால் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க தேவையில்லை.அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுனர் செந்தில்குமார் கூறியதாவது:
புதிய தொழில்நுட்பத்தை பெங்களூரு தோடக்ககலை ஆராய்ச்சி மையம் கண்டுபிடித்துள்ளது. தக்காளி சாகுபடியில் 16 பாத்திகளுக்கு, ஒரு பாத்தி செண்டு மல்லி நட வேண்டும். பூச்சிகளை தடுக்க செலவு குறைந்த பயிர்களை தேர்வு செய்ய வேண்டும். புதிய தொழில் நுட்பம் குறித்து விவசாயிகள் அறிந்து கொள்ள எங்கள் பண்ணையில் செயல்விளக்க திடல் அமைத்துள்ளோம், என்றார்.
தொடர்புக்கு
காந்தி கிராம் வேளாண் பல்கலைகழகம், காந்திக்ராம் 624 302 திண்டுக்கல் மாவட்டம் ஈமெயில்: grucc@ruraluniv.ac.in தொலைபேசி எண் 04512452371 to 04512452375
நன்றி:தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்