தக்காளி சாகுபடி டிப்ஸ்

ஆண்டு மூழுவதும் பயிர் செய்யக்கூடிய தக்காளியை நல்ல வடிகால் வசதியுள்ள வண்டல் மண்ணில் சாகுபடி செய்யலாம்.

கோ-1,2,3, பி.கே.எம்.1, பூசா ரூபி, பையூர் ஆகிய இரகங்கள் சாகுபடி செய்ய ஏற்றது.  இதனை பிப்ரவரி,மார்ச், ஜூன், ஜூலை, நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் விதைக்கலாம்.

  • விதை நேர்த்தி ஒரு ஹெக்டேருக்கு 350-400 கிராம் விதைகள் போதுமானது. ஒரு ஹெக்டேருக்கு தேவையான விதைகளை 40 அசோஸ்பைரில்லம் கொண்டு விதைநேர்த்தி  செய்யவேண்டும்.
  • இவ்வாறு நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை ஒரு மீட்டர் அகலமுள்ள மேட்டுப்பாத்திகளில் 10 செ.மீ. வரிசை இடைவெளியில் விதைத்து மணல் கொண்டு மூடிவிடவேண்டும்.
  • நிலத்தை நன்கு உழுது பயன்படுத்திவிட்டு 60 செ.மீ, இடைவெளியில் பார்கள் அமைத்து 25 நாள் வயதுடைய நாற்றுகளை பயிரின் ஒரு பக்கத்தில் நடவேண்டும்.
  • நடுவதற்கு முன்னர் இரண்டு கிலோ அசோஸ் பைரில்லம், நுண்ணுயிர் கலவையை 20 கிலோ தொழு உரத்துடன் கலந்துவிட வேண்டும்.
  • நட்ட  உடன் முதல் தண்ணீரும், பிறகு 3 வது நாள் உயிர் தண்ணீரும், பிறகு வாரத்திற்கு ஒரு முறையும் நீர் பாசனம் செய்யவேண்டும்.
  • அதற்கு பின்னர் தேவைப்படும் போது நீர் பாய்ச்சினால் போதுமானது.

உர நிர்வாகம்:

  • ஒரு ஹெக்டேருக்கு தொழு உரம் 25 டன், தழைச்சத்து 75 கிலோ, மணிச்சத்து 100 கிலோ, சாம்பசல்சத்து 50 கிலோ, போராக்ஸ் 10 கிலோ, துத்தநாக சல்பேட், 50 கிலோ, ஆகியவற்றை அடியுரமாக இடவேண்டும்.
  • நட்ட 30, வது நாள் தழைச்சத்து 75 இட்டு மண் அணைக்கவேண்டும்.
  • நாற்று நட்ட 15 நாள் டிரைகான்டினால் 1 மிலி/1 லிட்டர் என்ற அளவில் பூக்கும் தருணத்தி பூக்கும் தருணத்தில் தெளிக்கவேண்டும்.  இவ்வாறு தெளிப்பதால் மகசூலை அதிகரிக்க செய்யலாம்.

பின்செய் நேர்த்தி

  • நாற்று நடுவதற்கு முன்னர் ஒரு புளோகுளோரலின், மருந்தை 500 லிட்டர் நீரில் நன்றாக கலந்து தெளிக்கவேண்டும்.
  • பின்னர் நீர் பாய்ச்சி நாற்றுகளை நடவேண்டும்.
  • நாற்று நட்ட 30நாள் ஒரு கைக்களை எடுக்கவேண்டும்.
  • காய்புழு மற்றும் புரோட்டினியா புழுவை கட்டுப்படுத்த இனக்கவர்ச்சிபொறியை எக்டருக்கு 12 என்ற எண்ணிக்கையில் அமைக்கவேண்டும்.
  • புழுக்கள் தாக்கப்பட்ட பழங்களையும், வளர்ந்த புழுக்களையும் உடனே அழித்துவிடவேண்டும்.
  • ஒரு ஹெக்டேருக்கு ஒரு லிட்டர் தண்ணீரில், 2 மிலி எக்காலக்ஸ் மருந்தை கலந்து தெளிக்கவேண்டும்.
  • ட்ரைகோடெர்மா என்னும் முட்டை ஒட்டுண்ணியை எக்டருக்கு 50 என்ற அளவில் பூக்கும் தருணத்தில் இடவேண்டும்.

நாற்று அழுகள் நோய்:   

  • விதைப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்னதாக ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி என்ற விகிதத்தில் கலந்து விதை செய்நேர்த்தி செய்து விதைக்கவேண்டும்.
  • நாற்றங்காலில் நீர் தேங்கக்கூடாது.
  • ஒரு லிட்டர் தண்ணீரில் 2.5 கிராம் காப்பர், ஆக்சிகுளோரைடு கலந்து பாத்திகளில் ஊற்றவேண்டும்.
  • இலைச்சுருட்டு நச்சுயிரியை  நோயைக் கட்டுப்படுத்த டைமீத்தோவேட் மருந்தினை 2 மில்லி /லிட்டர் என்ற விதத்தில் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டு.
  • மேற்கண்ட தொழில்நுட்பமுறைகளை பின்பற்றினால் ஒரு ஹெக்டேருக்கு 35 முதல் 40 டன் பழங்களை மகசூலாகப்பெறலாம்.

தகவல்: தோட்டக்கலைத்துறை, தஞ்சாவூர்.

தகவல் அனுப்பியவர் : முருகன்,M.S.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம்,  திருவையாறு

நன்றி: M.S.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *