தக்காளி பயிரைத் தாக்கும் பூச்சிகள்: புரோடினியா

தாக்குதலின் அறிகுறிகள்:

 • இளம்புழுக்கள் இலைகளை அரித்து சல்லடை போல் ஆக்கியிருக்கும்
 • வளர்ந்த புழுக்கள் இலைகள் அனைத்தையும் தின்று அழித்துவிடும்
புழுவின் சேதம் இலைகளை அரித்தல் இலைகளில் சேதம் பூவில் சேதம்

பூச்சியின் விபரம்:

 • முட்டை: தாய்ப்பூச்சி இலையில் சந்தனப் பொட்டு போன்று குவியலாக முட்டையிட்டு உரோமத்தால் மூடும்.
 • புழு: இளம்புழுக்கள் கூட்டமாக ஒரே இடத்தில் இருக்கும். புழு கருமை கலந்த பச்சையாகவும், உடம்பில் திட்டுத் திட்டான கரும்புள்ளிகனும் காணப்படும்.
 • முதிர்பூச்சி: பழுப்பு நிறத்தில் இருக்கும். முன் இறகானது பழுப்பு நிறத்துடன் அலைஅலையாய் வெள்ளை நிற கோடுகளுடன் ,பின் இறகானது வெள்ளை நிறத்துடன் ,பழுப்பு நிற கோடுகளுடன் காணப்படும்
புழு முதிர்பூச்சி

கட்டுப்படுத்தும் முறை:

 • நிலத்தை உழுது மன்னில் புதைந்துள்ள கூட்டுப் புழுக்களை வெளிப்படுத்தி அழிக்கவும்
 • வயில் வரப்பு ஓரங்களில் ஆமணக்கை கவர்ச்சிப்பயிராக பயிரிட்டு அதில் காணப்படும் இளம் புழுக்கள் மற்றும் முட்டைக் குவியல்களைச் சேகரித்து அழிக்கவும்
 • ஒரு ஹெக்டேருக்கு ஒரு விளக்கு பொறி அமைக்கவும்.
 • இனக்கவர்ச்சிப்பொறி (ஃபெரோடின் எஸ்.எல்.) ஏக்கருக்கு 15 வைத்து ஆண் பூச்சிகளை கவர்ந்து அழிக்கவும்.
 • வளர்ந்த புழுக்களை சேகரித்து அழிக்கவும்
 • புரோடினியா என்.பி.வி வைரஸ் 100 புழு சமன் அளவு (ஏக்கருக்கு 300 நோயுற்ற புழுக்கள்) கிருமியுடன் 2.5 கிராம் வெல்லம் மற்றும் 0.1 சதம் பீபால் கலந்து மாலை நேரத்தில் தெளிக்கவும்
 • நச்சுக்கவர்ச்சி உணவு:  ஒரு ஏக்கருக்கு 5 கிலோ அரிசித் தவிடு + 500 கிராம் வெல்லம் + 500 கிராம் கார்பரில் 50 சத நனையம் àள் கலந்து போதிய நீர் தெளித்து சிறுசிறு உருண்டைகளாக்கி நச்சுணவு வைக்க வேண்டும்

நன்றி:  தமிழ் நாடு வேளாண் பல்கலை கழகம்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *