பசுமை கூடாரத்தில் தக்காளி ஆண்டுக்கு ரூ.20 லட்சம்!

தேனி அருகே தாடிச்சேரியை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன். மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் பணியாற்றி விருப்ப ஓய்வில் உள்ளார்.

விவசாயத்தில் நாட்டம் கொண்டு தனது 50 சென்ட் நிலத்தில் 20 லட்சம் ரூபாய் செலவில் பசுமை கூடாரம் (பாலிஹவுஸ்) அமைத்தார். தோட்டக்கலை சார்பில் 9 லட்சம் ரூபாய் மானியம் கிடைத்தது.
அவர் கூறியதாவது:

Photo Courtesy: Dinamalar
  • குஜராத் தக்காளி விதைகளை (விதை ஒன்று 5.50 ரூபாய்) வாங்கினேன். குளித்தட்டு மூலம் நாற்றுகள் எடுத்து 5,000 செடிகளை பயிரிட்டேன்.
  • 2 ஏக்கர் விளை நிலத்தில் பயிரிடுவதை, 50 சென்ட் பரப்பில் அமைத்த பசுமை கூடாரத்தில் பயிரிட்டு அதே விளைச்சல் எடுக்கலாம்.
  • வயல்களில் பயிரிடும் செடிகளில் இருந்து விளையும் தக்காளி கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யும் பட்சத்தில், பசுமை கூடாரத்தில் விளையும் தக்காளி 100 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
  • வெப்பத்தை ஒரே சீராக வைத்திருக்கும். அதிகவெப்பம், பனி மற்றும் மழை காலங்களை பொருட்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.
  • பூச்சிகளை கட்டுப்படுத்தலாம். மழைக்காலத்தில் மழைநீர் உள்ளே செல்லாமல், பசுமை கூடாரம் மூலம் கிணற்றில் மழைநீரை சேமிக்கலாம். இதனால் செடிகளில் நோய் தாக்குதல் இருக்காது. மருந்து அடிக்க தேவையில்லை.
  • அழுகல், சூம்பி போதல் என ஒரு தக்காளி கூட வீணாகாது. தக்காளி செடிகளுக்கு அருகே களைச்செடிகள் வளராது.
  • செடிகள் நடப்பட்ட 75வது நாளில் இருந்து தக்காளி பறிப்பிற்கு தயாராகி விடும். வாரத்திற்கு 2 அல்லது 3 முறை பறிக்கலாம். ஓராண்டு வரை பராமரித்து தொடர்ந்து தக்காளிகளை பறிக்கலாம்.
  • வெளியில் நடப்படும் தக்காளி செடிகள் 5 மாதங்கள் கூட தாங்குவது இல்லை. ஒரு தக்காளி செடியில் இருந்து 6 கிலோ தக்காளி மட்டுமே கிடைக்கிறது.
  • ஆனால் பசுமை கூடாரத்தில் கொடியாக வளர்க்கப்படும் தக்காளி செடியில் 25 கிலோ வரை கிடைக்கிறது.
  • பசுமை கூடாரத்தில் கலாஸ், பிங்க் ராக், ஜேக்கப் வகை தக்காளிகளை பயிரிடுவது உகந்தது.
  • 50 சென்ட் அளவிலான பசுமை கூடாரத்தில் பயிரிடப்படும் செடிகளில் குறைந்தபட்சமாக 50 டன், அதிகபட்சமாக 125 டன் வரை விளைச்சல் கிடைக்கும்.
  • இதன் மூலமாக ஆண்டிற்கு சராசரியாக 20 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டலாம், என்றார்.

தொடர்புக்கு 09894317358 .
எம்.கார்த்திக், தேனி.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *