புதிய ரக தக்காளி – வீரிய ஒட்டு3
இந்த ரகம் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
- எக்டருக்கு 96.2 டன் பழமகசூல் கொடுக்கக் கூடியது.
- இது கோடிஎச்.2, லட்சுமி ரகங்களைக் காட்டிலும் முறையே 9.76 மற்றும் 42.24 சதம் கூடுதல் மகசூலாகும். அதிகபட்ச மகசூலாக எக்டருக்கு 129.5 டன் கொடுக்க வல்லது.
- வயது – 145-150 நாட்கள்.
- பருவம் – பிப்ரவரி-மார்ச், மே-ஜூன், நவம்பர்-டிசம்பர்.
- பயிரிட உகந்த மாவட்டங்கள்: கோவை, சேலம், கடலூர், தஞ்சாவூர், மதுரை, தேனி, காஞ்சிபுரம், தூத்துக்குடி, திண்டுக்கல், திருச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை.
- சிறப்பியல்புகள்: அடர்நடவு முறைக்கு ஏற்றது. பழங்கள் கொத்தாகவும், (கொத்திற்கு 3-5 பழங்கள்), 55.65 கிராம் எடையுடனும், உருண்டை வடிவிலும் இருக்கும். பழங்களில் 5.58 பிரிக்ஸ் மொத்த கரையும் திடப்பொருளும், 0.73 சதம் புளிப்புச்சுவையும், 35.72 மி.கி/100 கி வைட்டமின் சி சத்தும் அடங்கியுள்ளது.
- இலைச்சுருள், நச்சுயிரி நோய், வேர்முடிச்சு நூற்புழுவுக்கு மித எதிர்ப்புத்திறன் கொண்டது.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
where and how i can buy the hybrid3 tomato seeds please send me the address in tamilnadu