‘மூடாக்கு’ தொழில்நுட்ப முறை: தக்காளி விளைச்சலில் சாதனை

தமிழகத்தில் வறட்சியால் நீர் நிலைகள் வறண்டு விட்டன. தண்ணீர் பிரச்னை தலை விரித்தாடுகிறது. கிணற்று நீர் பாசனத்தில் ஒரு சிலர் கத்தரி, வெண்டை, புடலை, அவரை போன்ற காய்கறிகளை விவசாயிகள் சிலர் பயிரிட்டுள்ளனர். எனினும் வறட்சியை தாக்குப்பிடிக்க முடியாமல் பயிர்கள் கருகி வருகின்றன.

தண்ணீர் பிரச்னையிலும், கடும் வெயிலையும் தாங்கி வளரும் வகையில் புதிய தொழில்நுட்ப முறையில் தக்காளி பயிரிட்டுள்ளார்.

Courtesy: Dinamalar

‘மூடாக்கு’ முறையில் சொட்டு நீர் பாசனம் மூலம் குறைந்த தண்ணீர் செலவில் தக்காளி சாகுபடியில் அமோக விளைச்சல் கண்டு சாதித்து வருகிறார் மதுரை துய்யனேரியை சேர்ந்த முன்னோடி விவசாயி அருள் பிரகாசம்.

மூடாக்கு தொழில்நுட்பம் குறித்து அவர் கூறியதாவது:

  • தக்காளி செடிகளுக்கு தண்ணீருடன், வெயிலும் மிதமாக இருக்க வேண்டும்.
  • அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியசை தாண்டக்கூடாது. வெயில் அதிகமிருந்தால் பூக்கள் உதிர்ந்து, செடிகள் கருகி விடும். மழை பெய்தால் செடி, பூக்கள் தரையில் சாய்ந்து வீணாகிவிடும். இதனால் மகசூல் பாதிப்பதால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.
  • நஷ்டத்தை தவிர்ப்பதற்காக 4 ஏக்கரில், நாடு, பெங்களூரு உருட்டு என 5 வகை தக்காளி பயிர் செய்துள்ளேன். புதிய மூடாக்கு முறையில் முயற்சி செய்துள்ளேன்.
  • செடிகள் முளைக்கத் துவங்கியதும் செடிகளுக்கு நேராக துவாரங்கள் அமைத்து பாலி கவர்களை மூடி விடுகிறோம். பசுந்தழை, அமோனியா நைட்ரேட் போன்ற உரங்களை கலந்து சொட்டு நீர் பாசனம் மூலம் வழங்குகிறேன்.
  • நைட்ரேட் முறை உரங்களை செடிகள் அதிகம் எடுத்துக் கொள்வதால் நன்கு வளருகின்றன.
  • மூடாக்கு முறையால் தண்ணீர் ஆவியாகாமல் மீண்டும் செடிகளுக்கே கிடைக்கிறது.
  • குறைந்த தண்ணீரில் 45 டிகிரி வெயிலிலும் செடிகள் ஈரப்பதத்துடன் இருப்பதால் வெயிலின் தாக்கம் இல்லாமல் உள்ளது.
  • அத்துடன் பந்தல் அமைத்து செடிகளை தரையில் சாயாமல் கட்டி உள்ளேன். இம்முறையால் செடிகள் தரையில் சாயாமலும், பூக்கள் உதிராமலும் உள்ளதால் அதிக மகசூல் கிடைக்கிறது.
  • அதிக செலவு செய்து பாலி கார்பனேட் கூடாரங்கள் அமைப்பதற்கு பதிலாக, சோதனை முறையில் செய்துள்ளேன். இம்முறையில் அதிகபட்சமாக 52 டன் வரை மகசூல் கிடைக்கும். குறைந்த செலவில் அதிக லாபம் கிடைக்கும்.
  • பந்தல், பாலி கார்பன், சொட்டு நீர் பாசன உபகரணங்கள் அமைக்க ஒருமுறை செலவு செய்தால் போதும்.
    வேறு பயிர்களுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • அத்துடன் நிலத்தை வீணாக்காமல் பாகல், புடலை, உளுந்து, முள்ளங்கி, அவரை, துவரை, கொத்தவரை, கீரை, மக்காச்சோளம் போன்றவற்றையும் பயிர் செய்துள்ளேன், என்றார்.

தொடர்புக்கு 09003490009 .

நன்றி: தினமலர்

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *