கூடுதல் வருவாய்க்கு வேலிப்பயிராக துவரை சாகுபடி!

வறட்சியை தாங்கி வளரும் துவரையை மானாவாரியாகவும், வேலிப்பயிராகவும் பயிரிட்டு பயன்பெறலாம் என வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

உடுமலை சுற்றுவட்டாரத்தில் தென்னை, மக்காச்சோளம், வாழை, பீட்ரூட், தக்காளி மற்றும் வெங்காயம் உட்பட பல்வேறு வகையான காய்கறிகள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அதோடு, மானாவாரியாகவும் கொள்ளு, துவரை, மொச்சை உட்பட பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது.

மானாவாரியாக விதைக்கப்படும் பயிர்களை இறவை பாசனத்தில் பயிரிடப்படும் பயிர்களுக்கு பாதுகாப்பாக வரப்புகளில்,வேலிப்பயிராக நடவு செய்ய ஆரம்பித்துள்ளனர்.

வேலிப்பயிராக நடவு செய்வதால் முக்கிய பயிர்களுக்கு காற்றினால் ஏற்படும் பாதிப்பு, நோய் மற்றும் பூச்சி தாக்குதல் கட்டுப்படுத்தப்படுகிறது. கூடுதல் பலன் கிடைப்பதுடன், விவசாயிகளுக்கு இரண்டு வருமானம் கிடைப்பதற்கும் வாய்ப்புள்ளது.

பயிர்களுக்கு பாய்ச்சப்படும் தண்ணீரை வேலியோரத்தில் வைக்கப்பட்டுள்ள பயிர்களும் எடுத்துக்கொள்வதால் செழிப்பாக வளர்ந்து காணப்படுகிறது. இதனால், வேலிப்பயிரிலும் சிறந்த விளைச்சலை விவசாயிகள் எடுத்து வருகின்றனர்.

உடுமலை அருகே கொங்கல்நகரத்தில்வாழை பயிருக்கு வேலியாக வரப்புகளில், துவரை நடவு செய்து விவசாயி அசத்தியுள்ளனர். இதனால்,வாழையில் காற்றினால் ஏற்படும் பாதிப்பு குறைவதுடன், வீட்டுக்கு தேவையான துவரையையும் எடுத்துக்கொள்ள முடிகிறது என்று தெரிவிக்கிறார்.

வறட்சியை தாங்கி வளரும் தன்மையுடையதால் விவசாயிகள் தனிப்பயிராகவும் சாகுபடி செய்து நிறைவான மகசூலை பெற முடியும். துவரைக்கான தேவையும் தொடர்ந்து இருப்பதால் மானாவாரி பகுதியில் பயிரிட்டு விவசாயிகள் பயன்பெறலாம் என, வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *