துவரையின் சாகுபடி, விதை நேர்த்தி முறைகள்

துவரை முக்கிய பயறு வகைகளில் ஒன்று. இதனை ஏழையின் மாமிசம் என்பார்கள்.இதில் 25-25 சதவீதம் புரதச்சத்து உள்ளது.

 • துவரை வறட்சி தாங்கி, எல்லா மண்ணிலும் வளரக்கூடிய பயிர்.
 • இதன்வேர் முடிச்சுகள் காற்றில் உள்ள தழைச் சத்தை மண்ணில் நிலை நிறுத்தி, மண் வளத்தை பாதுகாக்கிறது.
 • அறுவடைக்கு பிறகு இதன் தட்டைகள் எரிபொருளாகவும் பயன்படுகிறது.
 • 150-180 நாட்கள் வரையுள்ள நீண்ட கால ரகம் (2வம்பன்,எஸ்ஏ-1,கோ6), 120-140 நாட்கள் வரையுள்ள மத்திய காலரகம் (கோ1,கோ2,கோ3,கோ4,கோ5), 100-110 நாட்கள் வரையுள்ள குறுகிய கால ரகங்கள் (வம்பன் 1,2-3) ஆண்டுகள் பலன்தரும் பல்லாண்டு ரகம் (பி.எஸ்.ஆர்1) ஆகிய நான்கு ரகங்கள் ரகங்கள் உள்ளன.
 • ஆடி பட்டம் மானாவாரி சாகுபடிக்கு ஏற்றது.
 • நீண்ட கால ரகங்களை ஆடிப்பட்டத்தை தவிர மற்ற பட்டங்களில் பயிரிடக் கூடாது. குறுகிய கால ரகங்களை இறவையிலும், ஆடி,புரட்டாசி மற்றும் கோடை பருவத்திலும் விதைக்கலாம்.
 • செம்மண் நிலம் துவரை சாகுபடிக்கு மிகவும் ஏற்றது.
 • கோடை உழவு செய்வது அவசியம். நிலத்தை நன்கு புழுதி வரும்வரை உழ வேண்டும்.
 • கடைசி உழவின்போது ஏக்கருக்கு 5டன் நன்கு மக்கிய தொழுஉரம் அல்லது ஒரு டன் மண் புழு உரம் இட வேண்டும்.
 • அமிலத்தன்மையுள்ள நிலங்களுக்கு ஊட்ட மேற்றிய தொழு உரம் இடுவதன் மூலம் அமிலத்தன்மையை நிவர்த்தி செய்யலாம்.
 • நீண்ட கால ரகங்களுக்கு தனிப்பயிராக இருந்தால் ஏக்கருக்கு 4 கிலோவும், ஊடுபயிராக இருந்தால் ஏக்கருக்கு 2கிலோவும் விதைகள் தேவைப்படும்.
 • மத்திய கால மற்றும் குறுகிய கால ரகங்களுக்கு தனிப்பயிராக இருந்தால் ஏக்கருக்கு 10 கிலோவும், ஊடுபயிராக இருந்தால் ஏக்கருக்கு 5 கிலோவும் விதைகள் தேவை.
 • சான்று பெற்ற விதைகளைப் பயன்படுத்துவதன் மூலம் முளைப்பு திறன் கூடுவதோடு, பூச்சி நோய்த் தாக்குதலைத் தடுக்க முடியும்.

விதை நேர்த்தி:

 • ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பன்டாசிம் பூசனக்கொல்லி மருந்து கலந்து, 24 மணி நேரத்துக்கு பிறகு ரைசோபியம் நுண்ணுயிரிகளால் விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
 • விதைகளை ஒரு பாக்கெட் ரைசோபியம் கலவையுடன் அரிசி கஞ்சியையும் சேர்த்து 15 நிமிடம் நிழலில் உலர வைக்க வேண்டும்.
 • நுண்ணுயிர் கலந்த விதைகளை தாமதம் செய்யாமல் உடன் விதைக்க வேண்டும்.

தகவல்: வேளாண்மை துணை இயக்குநர், உழவர் பயிற்சி நிலையம்,             குடுமியான்மலை.

நன்றி: M.S. சுவாமிநாதன் ஆராய்ச்சி நிலையம்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *