துவரை சாகுபடி

பயறு வகை பயிர்களில் துவரை மிகவும் முக்கியமான பயிராகும். துவரை சாகுபடி பரப்பை அதிகரிக்கவும், நவீன தொழில்நுட்பத்தின் மூலம் துவரை உற்பத்தித் திறனைப் பெருக்கவும் வேளாண்மைத் துறை மூலம் மானியம் வழங்கப்படுகிறது.

துவரை சாகுபடியின் முக்கியத்துவம்:

 • தொடர்ந்து ஒரே பயிரை சாகுபடி செய்யும்போது சில சத்துக்கள் மண்ணில் பற்றாக்குறை ஏற்படும்.
 • துவரையின் வேர்கள் மண்ணில் ஆழத்துக்குச் சென்று மண்ணின் அடிப் பகுதியில் உள்ள சத்துக்களை பயன்படுத்துவதால், பிற பயிர்கள் பயிரிடும்போது மண்ணில் உள்ள ஊட்டசத்தை சிறந்த முறையில் பயன்படுத்தும் வாய்ப்பு கிடைக்கிறது.
 • துவரையின் வேர் முடிச்சுகள் தழைச்சத்தின் தன்மையை அதிகரிக்கிறது.
 • துவரையின் வேர்ப் பகுதியில் இருந்து சுரக்கும் அமிலங்கள் மண்ணில் மணிச்சத்தைக் கரைத்து மற்ற பயிர்களுக்கு கிடைத்திடச் செய்ய உறுதுணையாக உள்ளது.
 • துவரை முதிர்ச்சி அடையும்போது அதிலிருந்து உதிரும் இலைகள் நிலத்துக்கு ஊட்டச்சத்து அளிக்கும்.
 • இந்தியாவில் இப்போதைய உணவு உற்பத்திசுதந்திரத்துக்குப் பிறகு 5 மடங்காக அதிகரித்துள்ளது. ஆனால், பருப்பு வகைகளின் உற்பத்தி அதிகரிக்கவில்லை.
 • எனவே, வெளிநாடுகளில் இருந்துதான் பருப்பு வகைகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. உள்நாட்டில் பருப்பு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவே விவசாயிகளுக்கு அரசு மானியம் வழங்கப்படுகிறது.

சாகுபடி குறிப்புகள்:

 • நீர்ப் பாசன வசதியுடைய செம்மண் மற்றும் வண்டல் மண் துவரை சாகுபடிக்கு ஏற்றது.
 • கரிசல் மண்ணில் வடிகால் வசதி மிகவும் அவசியமானது.
 • அதிக மகசூல் பெற விதைகளை மண் கலவை நிரப்பப்பட்ட பாலித்தீன் உறைகளில் விதைத்து நாற்றாங்கால் பராமரிக்க வேண்டும்.
 • 30 நாள் நாற்றுகளை நட வேண்டும்.
 • நடுத்தர கால துவரையின் வயது 130 முதல் 135 நாள்களாகும்.

மானியம்:

 • துவரை சாகுபடி செய்ய விருப்பமுள்ள விவசாயிகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படும்.
 • விதைகள் மற்றும் இடுபொருள்கள் மானிய விலையில் வழங்கப்படும். விருப்பமுள்ல விவசாயிகள் அந்தந்த வட்டாரங்களில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகி பயன்பெறலாம்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *