நுனி கிள்ளுதல் மூலம் துவரையில் கூடுதல் மகசூல்

  • துவரை சாகுபடியில் நுனியை கிள்ளி விடுவதன் மூலம் மகசூலை அதிகரிக்கலாம் என வேளாண்மை துறையினர் யோசனை தெரிவித்தனர்.
  • நத்தம், சிறுகுடி, காசம்பட்டி, பட்டணம்பட்டி, மூங்கில்பட்டி, செந்துறை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் மானாவரியாக துவரை சாகுபடி செய்துள்ளனர். தற்போது பெரும்பாலான பகுதிகளில் பூவில் இருந்து காய் பிடிக்கும் தருவாயில் உள்ளது.
  • செடியின் நுனியை கிள்ளி விடுவதால் பக்க கிளைகள் வளர்ந்து, அதிக பூக்கள் பூத்து காய் பிடிக்க வாய்ப்புள்ளது.
  • மேலும் மகசூலை அதிகரிக்க இரண்டு சத டி. ஏ. பி., கரைசலை மாலை நேரத்தில் தெளிக்கலாம்.
  • அந்தந்த பகுதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் டி. ஏ. பி., உரம் வாங்கி ஏக்கருக்கு 10 கிலோ வீதத்தில் கரைசல் தயாரித்து தெளிக்கலாம். கூட்டுறவு சங்கங்களில் வாங்கப்படும் உரங்களின் பட்டியல் , வங்கி கணக்கு மற்றும் இதர விபரங்களை வேளாண்மை அலுவலகத்தில் சமர்ப்பித்து, 2.5 ஏக்கருக்கு ரூ.650 வீதம் மானியம் பெறலாம்.
  • மானியம் அவரவர் வங்கி கணக்கு மூலம் வழங்கப்படும். இதுதொடர்பான விபரங்களுக்கு நத்தம் உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம் என, விவசாய அதிகாரிகள் தெரிவித்தனர்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *