பருப்பு சாகுபடி செய்ய அரசு ஊக்குவிக்குமா?

நெல், கரும்புக்கு மாற்றாக, பருப்பு வகைகள் சாகுபடி செய்யும் அளவிற்கு, பல மாவட்டங்களில் மண் வளம் உள்ளது. இருப்பினும், டெல்டா உள்ளிட்ட பல மாவட்டங்களில், நெல் சாகுபடிக்கு மட்டுமே வேளாண் துறையினர் முக்கியத்துவம் அளிக்கின்றனர்.

தமிழகத்தில், ஆண்டுதோறும், 23 லட்சம் டன் அளவுக்கு, துவரை உள்ளிட்ட பருப்பு வகைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆனால், தேவை, உற்பத்தியைவிட மும்மடங்கு உள்ளது.

எனவே, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. ரேஷன் கடைகளுக்கும் வெளிநாடு இறக்குமதி தான் சப்ளை ஆகிறது. இதனால், பருப்பின் விலை, அதிகரித்தபடி உள்ளது.
பருப்பு உற்பத்தியை இங்குஅதிகரிக்க ஆர்வம் காட்டினால், அதன் விளைச்சல் அதிகரித்து விலை குறையும் என்ற நிலையில், அதற்கான சிறப்பு திட்டங்களை பிரதமர் மோடி அறிவித்துள்ளார். ‘தமிழகத்தில் அதற்கான முயற்சி எடுப்பது நல்லது’ என, பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.
வேளாண் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

இந்தாண்டு, பருப்பு வகைகள் உற்பத்தியை அதிகரிக்க, பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு திட்டங்களை அறிவித்துள்ளார். அத்திட்டங்களை,தமிழகத்திற்கு கொண்டு வந்தால், பருப்பு உற்பத்தி அதிகரிக்கும். இதற்கு அரசும், வேளாண் துறை உயர் அதிகாரிகளும் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

“டெல்டா மாவட்டங்களில், பருப்பு வகைகள் சாகுபடி செய்ய, மண்வளம் இல்லை என்றுகூறப்படுவது தவறு.வரும், 2017 ஜனவரி மாதம், சம்பா சாகுபடி முடிந்த கையோடு, பருப்பு வகைகள் சாகுபடி செய்ய, சிறப்பு திட்டங்களை அரசு வெளியிட வேண்டும்”  என்று கக்கரை சுகுமாறன்,மாநில துணைத் தலைவர், இந்திய விவசாயிகள் கூட்டமைப்புகூறினார்

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *