தாய் தென்னை மரங்களை தேர்ந்தடுக்கும் முறைகள்

விவசாயிகளுக்கு ஆண்டு முழுவதும் வருமானம் பெற்று தரும் மரங்களில் தென்னை மரமும் ஒன்று. அந்த தென்னை மரங்களை வளர்க்க தேவைப்படும் தாய் தென்னை மரங்களை தேர்ந்தெடுக்கும் போது மிக கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் தென்னை வளர்ப்பில் நஷ்டம் ஏற்பட வாய்ப்;பு உண்டு. இங்கே தாய் தென்னை மரங்களை தேர்ந்தெடுக்கும் வழிமுறைகள் பற்றி காண்போம்.

தென்னையின் ரகங்கள் :

  • தென்னை மரங்களில் பல்வேறு இயல்புகள் கொண்ட ரகங்கள் காணப்படுகின்றன. நமது நாட்டில் மேற்கு கடற்கரை நெட்டை, கிழக்கு கடற்கரை நெட்டை என்ற இரண்டு ரகங்கள் பரவலாக காணப்படுகிறது.
  • மேற்கு கடற்கரை நெட்டை ரகங்கள் தடித்து பருமனாகவும், பெரிதாகவும் இருக்கும். இது ஆண்டுக்கு 80-100 காய்கள் காய்க்கும்.
  • கிழக்கு கடற்கரை நெட்டை ரகங்களின் காய்கள் பருமன் சற்று குறைந்து காணப்படும். இது ஆண்டுக்கு 100-120 காய்கள் வரை காய்க்கும்.
  • தழிழகத்தில் ஈத்தாழி நெட்டை, அய்யம்பாளையம் நெட்டை போன்ற பல்வேறு ரகங்கள் காணப்படுகின்றன.

தாய் மரத்தின் குணம் :

  • தேர்வு செய்யப்படும் தாய் மரமானது இலையழுகல், இலைப்புள்ளி, இலைக்கருகல் மற்றும் தஞ்சை வாடல் நோய் போன்ற நோய்களால் தாக்கப்படாமல் இருக்க வேண்டும்.
  • மேற்கண்ட நோய்களால் தாக்கப்பட்ட மரங்கள் உள்ள தோப்பில் மற்ற ஒரு சில மரங்கள் இந்த நோய்களினால் தாக்கப்படுவதில்லை. அத்தகைய வலுவான நோய் எதிர்ப்பு தன்மையுள்ள மரங்களை தாய் மரங்களாக தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • 4 முதல் 5 ஆண்டுகளில் காய்க்க தொடங்கிய மரங்களில் இருந்து தாய் மரங்களை தேர்ந்தெடுக்கலாம்.
  • ஒவ்வொரு ரகத்தின் விளைச்சலை ஒப்பிட்டு பார்த்து அதன் மூலமும் தாய் மரங்களை தேர்ந்தெடுக்கலாம்.
  • நல்ல முளைப்பு திறன் மற்றும் ஒரே சீரான வீரியம் உடைய கன்றுகளை தரும் மரங்களை மட்டும் தேர்வு செய்ய வேண்டும்.

நடவு செய்யும் குழியின் அளவு :

  •  தென்னங்கன்றுகளை வாழை போன்ற மரங்கள் நடப்படும் சிறிய குழிகளில் நடாமல் 3 அடி ஆழம், 3 அடி அகலம் உள்ள குழிகளில் நட வேண்டும்.
  • 3 அடி ஆழத்தில் தோண்டப்பட்ட குழிகளில் 1 அடி ஆழத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட மண்ணை, வேர்பகுதியில் வேர்களுடன் காணப்படும் காய்ப்பகுதி ஒரு அடி இருக்குமாறு கையால் ஒரு அடி குழி எடுத்து காயை குழியில் பதித்து குழியை மூடி விட வேண்டும்.
  • பின்னர் ஒரு வாரம் கழித்து நீர் பாசனமுறைப்படி நீர் பாய்ச்ச வேண்டும். தேவைப்பட்டால் தென்னை அல்லது பனை ஓலையை வைத்து வெயில் படாதவாறு 3 மாதம் வரை பாதுகாக்கலாம்.
  • தென்னங்கன்றுகளை நட்டபின் குழியினுள் 2 அடி ஆழம் இருக்க வேண்டும். இந்த நிலையில் காயின் மேல் பகுதியில் மண் விழாதபடி இருந்தால் வண்டு தாக்குதலும், குருத்தோலை தாக்கப்படாமலும் பாதுகாத்துக் கொள்ளலாம்

பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *