மதுரை டோக்நகரைச் சேர்ந்த விவசாயி இருளாண்டி ராஜா தென்னையில் ஊடுபயிராக வாழை, கோகோ, கொய்யா, பப்பாளி, எலுமிச்சை மரங்கள் நட்டு லாபம் ஈட்டி வருகிறார்.
ஊடுபயிர் விவசாயம் குறித்து அவர் கூறியதாவது: சோழவந்தானில் பத்து ஏக்கரில் தென்னை மற்றும் வாழை மட்டுமே நடவு செய்துள்ளேன். இங்கே தண்ணீர் பிரச்னை குறைவு தான். 700 மரங்கள் வளர்கின்றன. 2 கிணறுகள் மூலம் பாசனமும், கண்மாய் மூலம் கிணற்றுக்கு தண்ணீரும் கிடைக்கிறது. 7 ஏக்கரில் நெட்டை ரகமும், மீதி குட்டைரக தென்னையும் வளர்கின்றன. 50 நாட்களுக்கு ஒரு முறை காய்கள் எடுத்து விடுவேன். இளநீருக்காக வெட்டி விற்பதில்லை. முற்றிய காயாகவே சந்தையில் விற்கிறேன்.டோக்நகரில் மூன்றரை ஏக்கரில் 300 தென்னை மரங்கள் இருந்தன. தண்ணீரின்றி 200 மரங்கள் பட்டுப் போயின. பட்டுப்போன மரத்தையொட்டி புதிதாக கன்று நட்டு வருகிறேன். தென்னைக்கு ஊடாக வாழை, கொய்யா, பப்பாளி, கோகோ, எலுமிச்சை மரங்கள் வளர்க்கிறேன்.
சில இடங்களில் அடர் நடவு முறையில் வாழைக்கன்றுகளை நெருக்கமாக நட்டுள்ளேன். முதலில் வளரும் வாழை பெரிதாகும். பக்க வாழைகளை இலைகளாக வெட்டி விற்பனை செய்கிறேன். கோகோ பழங்கள் சந்தையில் விற்கிறேன். அவற்றை பதப்படுத்தும் நுட்பம் தெரியவில்லை. கொய்யா, பப்பாளிக்கு உள்ளூர் சந்தையே போதும். ஆங்காங்கே பீர்க்கு, புடலை, காய்கறி பயிர் செய்து வீட்டு தேவைக்கு பூர்த்தி செய்கிறேன்.ஊடுபயிர் மூலம் ஈட்டும் வருமானம் தோட்ட பராமரிப்புக்கு சரியாகிறது. தென்னங்காய்கள் மூலம் லாபம் கிடைக்கிறது என்றார்.
இவரிடம் பேச: 8610666411
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்