தென்னையில் ஊடு பயிராக தீவனப்புல்

கறவை மாடுகளுக்கு தீவனப் பற்றாக்குறையை போக்க, சுல்தான்பேட்டை வட்டார விவசாயிகள், தென்னையில் ஊடுபயிராக தீவனப்புல் வளர்ப்பில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சுல்தான்பேட்டை வட்டாரத்தில், ஜல்லிப்பட்டி, கம்மாளப்பட்டி, செஞ்சேரிபுத்தூர், தாளக்கரை, வாரப்பட்டி, குமாரபாளையம், செலக்கரிச்சல், வதம்பச்சேரி, வடவள்ளி, போகம்பட்டி உட்பட பல இடங்களில் கறவை மாடு வளர்ப்புத்தொழில் முக்கியத் தொழிலாக உள்ளது. 4,000 கறவை மாடுகள் உள்ளன.

சுல்தான்பேட்டை வட்டாரத்தில், மேய்ச்சல் நிலங்கள் பரப்பளவு குறைந்ததால், கறவை மாடுகளுக்கு போதிய அளவு பசுந்தீவனம் கிடைக்கவில்லை. இதனால், கறவை மாடு வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், பொள்ளாச்சி, உடுமலை, தாராபுரம் பகுதிகளில் இருந்து பசும்புல், மலம்புல் வாங்கி வரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மேலும், தவிடு, புண்ணாக்கு விலையும் கிலோவுக்கு ரூ.இரண்டு முதல் மூன்று வரை உயர்ந்துள்ளதால், பசுந்தீவனம் வாங்குவது விவசாயிகளுக்கு கட்டுபடியாகவில்லை. அதனால், சுல்தான்பேட்டை வட்டாரத்தில் உள்ள பல விவசாயிகள், தென்னந்தோப்புகளில் தீவனப்புல்களை ஊடுபயிராக சாகுபடி செய்கின்றனர்.

இந்த முறையால் செலவும் குறைவதோடு நல்ல தீவனமும் கிடைப்பதாக கூறுகின்றனர்

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *