திண்டுக்கல் பகுதி விவசாயிகள் தென்னையை பாதுகாக்கும் வகையில் ஊடுபயிராக தக்காளி பயிரிட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் நத்தம், வத்தலக்குண்டு, ரெட்டியார்சத்திரம் பகுதிகளில் அதிகளவில் தென்னை மரங்கள் உள்ளன. அவற்றுக்கு தேவையான நீர், உரம் அளிக்காவிட்டால் விளைச்சல் பாதிக்கப்படும். வறட்சியான நேரங்களில் நீர் பற்றாக்குறையால் விவசாயிகள் தென்னைகளை சரியாக பராமரிப்பதில்லை. மேலும் தென்னை மரங்களுக்கு அடியில் நிழல் விழுவதால், விவசாயிகள் ஊடுபயிர் பயிரிடாமல் இருந்தனர்.
தற்போது குறைந்த சூரியஒளி தேவையுள்ள தக்காளியை தென்னைக்கு ஊடுபயிராக விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். இதன்மூலம் தக்காளிக்கு விடப்படும் நீர், உரம் தென்னை மரங்களுக்கும் கிடைக்கிறது. இதனால் இளநீர் விளைச்சல் அதிகரித்துள்ளது.
சூரியஒளி தாக்குதல் அதிகம் இல்லாததால் தக்காளி செடிகளும் பாதிக்கப்படுவதில்லை.
விவசாயி பி.ஜான்சன் கூறியதாவது: புதிய முறையில் தக்காளிக்கு மட்டும் செலவு செய்தால் போதும். தென்னை மரங்களை தனியாக பராமரிக்க தேவையில்லை. ஒரு ஏக்கரில் 7 டன் தக்காளி கிடைக்கிறது. சாதாரணமாக ஒரு தென்னை மரத்திற்கு 120 இளநீர் காய்க்கும். புதிய முறையால் 200 காய்க்கிறது. இந்த முறையில் கூடுதலாக ரூ.1.5 லட்சம் லாபம் கிடைக்கிறது, என்றார்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்