தென்னையை தாக்கும் கரையான் பூச்சியில் இருந்து, காப்பாற்ற மரங்களின் அடிப்பகுதியில் சுண்ணாம்பு பூசலாம்..
தென்னை மரங்களில் தென்னை ஓலை கருகல்நோய், தென்னை பிஞ்சு அழுகல் நோய் போன்றவை அதிகளவில் ஏற்படும்.
இது தவிர, தென்னை மரங்களை கரையான் பூச்சிகள் அதிகளவில் தாக்குகிறது.
தென்னை மரத்தின் கீழ் பகுதியில் கரையான் பூச்சி அரிக்க துவங்கி, மேற்பகுதி வரை தாக்குவதால், மரம் ஒரு விதமான நோய் தாக்கியது போல் மாறும்.
கரையானை கட்டுப்படுத்த ஈரோடு விவசாயிகள், மரத்தின் அடிப்பகுதியில் சுண்ணாம்பு அடித்துள்ளனர்.
ஈரப்பதம் காலத்தில்தான் கரையான் பூச்சி தென்னையை தாக்குகிறது.
மரத்தை ஆங்காங்கே அரித்து விடுவதால் தென்னை வலுவிழந்து விடும். காய் உற்பத்தியும் பாதிக்கும்.
பாதிப்பில் இருந்து தப்பிக்க, தென்னை மரத்தின் கீழ் பகுதியில் சுண்ணாம்பு அடித்தால் இது கரையானை கட்டு படுத்துகிறது
நன்றி: தினமலர்
தென்னையை பற்றிய மற்ற இடவுகளை இங்கே படிக்கலாம்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
One thought on “தென்னையில் கரையானை கட்டு படுத்துவது எப்படி?”