தென்னையில் கோகோ ஊடுபயிர்

கோகோ பயிரின் சிறப்பு

 • சாக்லேட் மற்றும் ஊட்டச்சத்து பானங்கள் தயாரிப்பதற்கு முக்கிய மூலப்பொருளாக கோகோ பயன்படுத்தப்படுகிறது.
 • இதன் தேவை இந்திய உற்பத்தியை விட அதிக அளவில் உள்ளதால் வெளி நாடுகளில் இருந்து தற்போது இறக்குமதி செய்யப்படுகிறது.
 • கோகோ பயிர் தென்னை மற்றும் பாக்கு தோட்டங்களில் சிறந்த ஊடுபயிராகவும், விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் ஈட்டித்தரும் பயிராகவும் உள்ளது.
 • தமிழகத்தில் 7,500 ஹெக்டேரில் கோகோ சாகுபடி செய்யப்பட்டு ஆண்டுக்கு 250 மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படுகிறது.

தென்னைக்கேற்ற சிறந்த ஊடுபயிர் கோகோவாகும்.

 • இவற்றை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு 3 ஆண்டு முதல் 45 ஆண்டுவரை வரை பலன் தருவதோடு மண்ணின் ஈரப்பதத்தை பாதுகாக்கிறது.
 • கோகோவின் மக்கிய இலைகள் மூலம் ஆயிரம் கிலோ வரை ஹெக்டேருக்கு மண்ணில் அங்ககச்சத்து கூடுகிறது.
 • கோகோ பழ ஓடு உரமாகவும், கால்நடை தீவனமாகவும் பயன்படுகிறது.
 • ஒரு ஹெக்டேரில் கோகோ சாகுபடி செய்தால் விவசாயிகளுக்கு 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை கூடுதல் லாபம் கிடைக்கும்.

கோகோ பயிர் சாகுபடி

 • நல்ல வடிகால் வசதி கொண்ட செம்மண் அல்லது வண்டல் மண்ணில் 15 டிகிரிலிருந்து 39 டிகிரி வரை வெப்பநிலை உள்ள இடத்தில் கோகோ நன்கு வளரும்.
 • இரண்டு தென்னை வரிசை நடுவில் ஒரு கோகோ வரிசையாக குறைந்தது 10 அடி இடைவெளி விட்டு நடவு செய்ய வேண்டும்.
 • நடவு செய்தவுடன் உயிர் தண்ணீர் இட வேண்டும்.
 • மண்ணின் தன்மைக்கேற்ப நீர்பாசனம் செய்ய வேண்டும். சொட்டு நீர் பாசனம் மிகவும் சிறந்ததாகும்.
 • கோகோவின் முக்கிய தண்டான சுப்பான் மேல்நோக்கி வளர்ந்து குறிப்பிட்ட உயரத்துக்கு வந்த பின் குடை போன்று பிரியும்.இவ்வாறு பிரியும் இடத்தை ஜார்கட்டு என்று அழைக்கப்படும்.
 • முக்கிய தண்டுக்கும் ஜார்கட்டுக்கும் கீழே முளைத்து வரும் கிளைகளை நீக்கி விட வேண்டும்.
 • பருவ காலங்களில் ஜார்கட்டில் இருந்து ஒரு  அடி அளவுக்கு கிளைகளில் உள்ள பக்க கிளைகளை அகற்றி சூரிய ஒளி ஜார்க்கட்டில் படுமாறு வழி வகை செய்ய வேண்டும்.
 • இந்த வகையான கவாத்து செய்தல் கோகோ நடவு செய்த மூன்று ஆண்டுகளுக்கு பின் பருவமழை காலங்களில் செய்ய வேண்டும்.
 • நன்கு முதிர்ந்த காய்கள் மஞ்சள் நிறமாக மாறும் போது அறுவடை செய்ய வேண்டும்.
 • அறுவடைக்கு கூரிய கத்தி கொண்டு பூந்தட்டுக்கு பாதிப்பு ஏற்படாமல்  அறுவடை செய்ய வேண்டும்.

இவ்வாறு “தென்னை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் ஊடுபயிராக கோகோவை பயிரிட்டு அதிக லாபம் பெறலாம்”  என, தோட்டக்கலை இணை இயக்குனர்  மோகன் தெரிவித்துள்ளார்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *