ஓய்வு பெற்ற வனத்துறை அலுவலர். தனது 70 வயதிலும் இளைஞர் போல் வயலில் சுறுசுறுப்புடன் விவசாயி பணியில் ஈடுபட்டு வருகிறார், மதுரை மாவட்டம் சோழவந்தான் விவசாயி சோணைமுத்து.
இவர் தென்னைகளுக்கு இடையே வாழைகளின் பெரும்பாலான ரகங்களை பயிரிட்டு சாதனை படைத்து வருகிறார்.
‘இயற்கை விஞ்ஞானி’ நம்மாழ்வாரின் விவசாய கொள்கையை பின்பற்றும் சோணைமுத்து கூறியதாவது:
- இரண்டரை ஏக்கர் நஞ்சை நிலத்தில் தென்னை சாகுபடி செய்கிறேன்.
- ஊடுபயிராக ஆந்திரா ரஸ்தாளி, கற்பூரவள்ளி, முப்பட்டை வாழை, நாட்டு வாழை ரகங்களை பயிரிட்டுள்ளேன்.
- மகசூல் அதிகம் கிடைப்பதற்காக மண் பரிசோதனை செய்தேன். நிலத்தை உழுது சமதளப்படுத்தினேன்.
- மண் வளம் மேம்பாட்டுக்காக ஆட்டுக்கிடை அமர்த்தினேன். மக்கிய குப்பை, சர்க்கரை பாகுடன் அசோஸ்பைரில்லம் 10 பாக்கெட் கலந்து இரண்டு நாட்கள் ஊற வைத்தேன். அதன் கலவையை வாழைக்கன்றின் வேர் பகுதியில் அரை கிலோ இட்டேன்.
- லாபகரமான விவசாயம் அடியுரமாக ஆட்டு சாண குப்பையை 30 நாட்களுக்கு ஒரு முறை, மாட்டு சாணம் குப்பை 15 நாள் ஒரு முறை இட்டும் பராமரித்து வருகிறேன்.
- வாழையில் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தியும், இயற்கை முறையில் விவசாயம் செய்வதால் பலன் இரட்டிப்பாக கிடைக்கிறது.
- குலை தள்ளி பூத்த வாழைத்தாரில் 10 ‘சீப்’ காய்கள் நன்கு விளைந்து உருண்டு பருத்து, பளபளப்பான நிறமாக காட்சியளிக்கும்.
- ஒரு ஏக்கருக்கு இயற்கை விவசாயத்திற்கு 60 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. வாழை மூலம் மட்டும் ஓராண்டில் ஏக்கருக்கு நான்கு லட்சம் ரூபாய்க்கு மேல் லாபம் கிடைக்கும்.
- தென்னையிலும் சீசனுக்கு ஏற்ப நல்ல லாபம் கிடைத்து வருகிறது.
தொடர்புக்கு 09443383262 .
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்